நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று உனக்குச் சொல்லுகிறேன்.
I say to you, the rooster shall not crow till you have denied Me three times. (John 13:38)
John 18:16,17; Matthew 26:34,69-75; Mark14:30,66-72; Luke 22:34,56-62; Proverb 16:18; Proverb 28:26; Proverb 29:23; 1Corintians 10:12; Matthew 5:18; Acts11:10.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 13:38)
யோவான் 18:16,17; மத்தேயு 26:34,69-75; மாற்கு 14:30,66-72; லூக்கா 22:34,56-62; நீதிமொழிகள் 16:18; நீதிமொழிகள் 28:26; நீதிமொழிகள் 29:23; 1கொரிந்தியர் 10:12; மத்தேயு 5:18; அப்போஸ்தலர் 11:10.
மூன்றுதரம் மறுதலிப்பாய்:
மறுதலிப்பாய் என்ற சொல்லின் பொருள் மறுத்தல் என்பதாகும். அதாவது ஒருவரோடு நல்லிணக்கமாய் இருந்துக் கொண்டு அவரை பார்த்து உன்னை நான் அறியேன் என்று மறுப்பதே மறுதலிப்பதாகும்.
ப.ஏ ல் நீதிமொழிகள் 30:9 ல் பரிபூரணம் அடைவதினால் மறுதலிக்கிறார்கள் என்று கூறுகிறார் சாலொமோன்.
தீர்க்கதரிசிகளும் கர்த்தரை மறுதலித்தார்கள் என்று எரேமியா(5:13) கூறுகின்றார். இஸ்ராயேலர் கிறிஸ்துவை மறுதலித்தார்கள் என்று அப்போஸ்தலர்கள் கூறினர். அப்போஸ்தலர் 3:13,14. பவுல் விசுவாசத்தை மறுதலித்தவனையும் (1தீமோத்தேயு 5:8) கிறிஸ்துவை மறுதலித்தவர்களையும் பட்டியலிடுகின்றார். (2தீமோோத்தேயு 2:12,13; 2தீமோத்தேயு 3:5; தீத்து 1:16). பேதுரு கர்த்தரை மறுதலிக்கிறவர்கள் தீவிர அழிவை அடைவார்கள் (2பேதுரு2:1) என்று கூறுகின்றார். மாமசத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாதவனும் இயேசுவே கிறிஸ்து என்றும் ஆண்டவர் என்றும் அறிக்கைபண்ணாதவர்களும் மறுதலிப்பவர்களே (1யோவா4:1-3). அவரை மறுதலிக்கிறவன் பிதாவையும் குமாரனையும் ஆவியையும் உடையவன் அல்ல, அந்திகிறிஸ்துவின் ஆவியை உடையவன். அப்படிபட்டவர்களோடு ஐக்கியமாய் இருக்கிறவர்களும் அந்தி கிறிஸ்துவின் ஆவி உடையவர்களே.
உணவு அருந்திவிட்டு இல்லை என்பவரும், வாங்கிட்டு இல்லை என்பவரும், கணவரை மனைவியை விட்டு பிரிபவர்களும், தான் பிறந்த சபையை விட்டு பிரிபவர்களும் தம்தம் நிலைகளில் உண்மையில்லாதவர்களும், நேர்மையில்லாதவர்களுமாயிருந்து மறுதலிக்கிறவர்களே.
சிலுவையின் பாதையின் செய்தியை விட்டு வேறு உபதேச முறைக்கு திரும்புகிறவர்களும் மறுதலிக்கிறவர்களே.
இயேசுவின் பின்னே போகதுணிந்தேன் பின் நோக்கேன் நான் பின் நோக்கேன் நான்.
சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 1யோவான் 2:21-24.