இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
Jesus said,Now the Son of Man is glorified, and God is glorified in Him. (John 13:31)
John7:39; John 11:4; John12:23; John16:14; Luke 12:50; Acts 2:36; Acts 3:13; Col2:13-15; Hebrews 5:5-9; 1Peter 1:21; 1Peter 4:11; Revelation 5:9-14.
அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். (யோவான் 13:31)
யோவான் 7:39; யோவான் 11:4; யோவான் 12:33; யோவான் 16:14; லூக்கா 12:50; அப்போஸ்தலர் 2:36; அப்போஸ்தலர் 3:13; கொலோசெயர் 2:13-15; எபிரெயர் 5:5-9; 1பேதுரு 1:21; 1பேதுரு 4:11; வெளி 5:9-14.
மரண அனுபவத்தில் மகிமையின் ருசி:
கர்த்தராகிய இயேசுவை காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட யூதாஸை இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களினாலும், அற்புத செயல்களினாலும், நற்கிரியைகளினாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவனுடைய வேகம் விவேகமானது அல்ல என்று சொல்லி உணர்த்தப்பட்டும் தனது வேகத்தை அதிகப்படுத்தினானேயன்றி நின்று நிதானிக்க தனக்குள் தான் இடம் தரவில்லை. இதை உணர்ந்து கொண்ட இயேசு வேதனையிலும், வருத்தத்திலும் துடிப்பதற்கு பதிலாக மனுஷகுமாரன் மகிமைப்படப்போகிறார் என்ற மகிமையின் ருசியை அனுபவித்தவராய் அக்களிக்கின்றார். தன்னை பலியாக்கத் துடிக்கும் செயலை கவனிப்பதை விட்டு விட்டு அந்த மரணத்துக்குபின் உள்ள மகிமையாகிய உன்னத அனுபவத்தினை முன் ருசியாக கொள்கின்றார்.
அன்பானவர்களே நம்மை காயப்படுத்துகிறவர்களையும், நம்மை கொலை செய்ய முனைகின்றவர்களையும் குறித்து வலிபடுவதும், தப்பி பிழைக்க வழி தேடுவதும் ஆகிய முறைகளை விட்டுவிட்டு அவைகளுக்கு பின்னால் தேவன் நமக்கு வைத்துள்ள ஆனந்த பாக்கியமும், அளவில்லா பேரின்பமும் ஆகிய உன்னத அனுபவங்களை உணர்ந்தவர்களாய் பாடுகளிலும் பரம சங்கீதம் பாடுவோம். இதுதான் பரம் பக்தர்களின் முற்கால அனுபவங்கள்.
நமக்கெதிராக எழும்புகிறவனை நாம் நோக்காமல் நமக்கு மேலே எழும்பி நிற்கிற தேவனை பாருங்கள். வாழ்வு கொஞ்சநாள். அதிலே நாம் தேவபிள்ளைகளோடு உன்னதமான அனுபவங்களை இங்கே அனுபவிக்க இறை இணைவை நாடுங்கள்.
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு; அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள் அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். அப்போஸ்தலர் 7:54-60.