அவன் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான், அப்பொழுது இராக்காலமாயிருந்தது

அவன் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான், அப்பொழுது இராக்காலமாயிருந்தது

அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான், அப்பொழுது இராக்காலமாயிருந்தது. (யோவான் 13:30)

நீதிமொழிகள் 4:16; ஏசாயா 59:7; ஏசாயா 21:12; சங்கீதம் 16:7; சங்கீதம் 134:1; தானியேல் 7:2.

Hi received soup, immediately out and it was night. (John 13 30)

Proverb 4:16; Isaiah 59:7; Isaiah 21:12; Psalm 16:7; Psalms134:1; Daniel7:2.

இது இராக்காலம்:
கர்த்தராகிய இயேசுவோடு மூன்றரை வருடங்கள் திருப்பணி செய்து தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய யூதாஸ் அவரிடம் துணிக்கையைப் பெற்றுக் கொண்டவனாய் அவரை விட்டு பிரிந்து போன செயல் ராக்காலத்தின் கிரியைகளாய் உள்ளது. யூதாஸ் இராக்காலத்துக்குள் துணிகரமாக நுழைந்து விட்டான். இனி இவனின் செயல்கள் யாவும் இரவின் கிரியைகளாகவும் துன்பத்தை விளைவிக்கின்றதாகவும் இருக்கும்.

இருளின் பிடியில் அகப்பட்ட தேவ மனிதர்களால் தேவனுடைய ராஜ்ஜியம் உபத்திரவங்களை அனுபவிக்கின்றது. தேவனுடைய மக்கள் சோதனைக்கு உள்ளாகின்றனர். வெளிச்சத்தை உமிழும் திருச்சபைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு அழிக்கப்படுகின்றது. சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கக் கூடாத படிக்கு சட்டங்களும் சம்பிரதாயங்களும் இயற்றப்படுகின்றன. இராக்காலத்துக்கு முடிவு உண்டாக்கவே இயேசு வந்தார். ஒளியாய் வந்த இயேசுவையே இராக்காலம் மேற்கொள்ள துடிக்கின்றது. ஆனாலும் அவர் இராக்காலத்தை மேற்கொண்டு உலகம் ஒளி பெறச் செய்தார்.

உலகிலுள்ள இராக்காலங்களுக்கு முடிவு உண்டாக்கி எங்கும் ஒளி பெறச் செய்ய சபையை நிலை படுத்தினார். சபைகளை மேற்கொள்ள இராக்காலம் துடிக்கின்றது. ஆனால் இராக்காலத்தை சபை மேற்கொள்ளும். ஒளி தரும் தீபங்களாகிய இராஜ்யத்தின் நாற்றுகள் இருள்களை மேற்கொண்டு நீதியின் சூரியனோடு இணைந்து கொள்ளும். விளக்கை அணைக்க இராக்காலத்துக்குள் புறப்பட்டு சென்ற யூதாஸ் இருளில் பிரகாசிக்கும் விளக்கை அணைக்க முடியாமல் நான்று கொண்டு செத்தது போல ஒளி தீபங்களை அணைக்க முயல்வோர் காணப்படாமல் போவார்கள்.

இரவே நீ வந்தாலும் ஒளியாய் ஒளிரும் என்னை மேற்கொள்ள மாட்டாய்.

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதும் இல்லை என்பது நிச்சயம்.
உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.

ஐஸ்வர்யவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும்படி நாடு. 1தீமோத்தேயு6:6-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME