அவர் அவனுடன் சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவரும் அறியவில்லை

அவர் அவனுடன் சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவரும் அறியவில்லை

But no one at the table knew for what reason He said this to him. (John 13:28)

Genesis 42:8; 1 Samuel 2:12; Jeremiah 40:14; Matthew 15:17; John 1:10; John 5:13; John 10:6; John 14:9; John 17:25; Acts 7:25; Romans 7:7; 1Corinthians 2:8; 1corinthians 8:2; 1John3:1.

அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. (யோவான் 13:28)

ஆதியாகமம் 42:8; 1சாமுவேல் 2:12; எரேமியா 40:14; மத்தேயு 15:17; யோவாான் 1:10; யோவான் 5:13; யோவான் 10:6; யோவான் 14:9; அப்போஸ்தலர் 7:25; ரோமர் 7:7; 1கொரிந்தியர் 2:8; 1கொரிந்தியர் 8:2; 1யோவான் 3:1.

ஒருவரும் அறியவில்லை:
இயேசுவோடு இருந்த சீஷர்கள் இயேசுவின் இந்த செய்கையையும் அதன் செய்தியையும் அறிந்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் யோவானுக்கும் பேதுருவுக்கும் தெரியும். சீஷர்களாயிருந்ததினால் குருவின் காரியங்கள் யாவையும் அறிய இயலாது. அவரை சிநேகித்து, அவரில் அன்பு செலுத்தி, அவரது மார்போடு இணைந்து வாழும் போதே அவரின் இரகசியங்களை அறிய முடியும்.

நேரடி பேச்சை விளங்கிக் கொள்ள இயலாதது சாதாரணமான காரியமாக இருக்கலாம். ஆனால் இவ்வித அறிவீனம் தொடரலாகாது. ஒருவரின் இருதய எண்ணத்தை அறியும் ஆற்றல் தேவனையன்றி வேறு எவருக்கும் இல்லை. ஒருவரின் செயலின் அர்த்தத்தையும், படத்தின் பொருளையும், எழுத்துக்களின் பொருளையும் இன்னொருவர் விளங்கிக்கொள்வது கடினமே. அதைபோலதான் சீஷர்களும் இயேசுவின் காரியங்களை விளங்கிக் கொள்ளவில்லை.

ஆனால் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவரது உபதேசங்களையும், கிரியைகளையும் அறிந்து கொள்ளாமல் மற்றவர்களுக்கு போதிக்க முடியாது. எனவேதான் தனி ஜெபத்தையும், தியானத்தையும் சபையானது மிகவும் வலியுறுத்துகின்றது. ஜெபிக்கும்போது அசைவுகளும், தியானிக்கும்போது அக்கினி மூளுவதும் உண்டாகுமானால் அவரது காரியங்களை அறிந்து அவரோடு இணைந்து பயணிப்பது அவசியமே.

நாம் அவரோடு இருக்க நேரத்தை செலவு செய்யாமல் அவரின் பலன்களை அறியமுடியாது. அவரின் பலன்களை பெறாமல் ஆவிக்குரிய வாழ்வில் வளர முடியாது.

அறியாதவர்களை விட்டு விடுவோம், அறியும்படியாய் போராடுவோம்.

உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 1கொரிந்தியர்2:7-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME