பிதாவின்

என் பிதாவின் நாமத்தினாலே வந்தும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை

I have come in My Father’s name, and you do not receive Me; if another comes. (John 5:43)
Mt24:5,23,24; Mk13:6,21; Lk21:8; Jn3:11; Jn6:38; Jn7:28; Jn8:26,28,29,42,43; Jn10:25; Jn17:4-6; Act5:34-42; Heb5:4,5; Ex5;23; Ex23:20-23.

நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். (யோவான் 5:43)

மத்தேயு 24:5,23,24; மாற்கு 13:6,21; லூக்கா 21:8; யோவான் 3:11; யோவான் 6:38; யோவான் 7:28; யோவான் 8:26,28,29,42,43; யோவான் 10:25; யோவான் 17:4-6; அப்போஸ்தலர் 5:34-42; எபிரெயர் 5:4,5; யாத்திராகமம் 5;23; யாத்திராகமம் 23:20-23.

நானா? வேறொருவனா?

ஆதியில் தேவனுக்கு எதிராக கலகம் விளைவித்து வெளியேற்றப்பட்ட சாத்தான் அக்காலமுதல் இக்காலம் வரையிலும் தேவனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறான்.
இயேசுகிறிஸ்துவுக்கு எதிராகவும்சாத்தான் கிரியை செய்கிறான்.
பரிசுத்த ஆவிக்கும் எதிராகவும்சாத்தான் கிரியை செய்கிறான்.
சபைக்கு விரோதமாகவும், சபையின் பணியாட்களுக்கு விரோதமாகவும், விசுவாச குடும்பங்களுக்கு எதிராகவும்சாத்தான் கிரியை செய்கிறான்.
கிறிஸ்தவ நற்பணிகளுக்கு எதிராகவும் சாத்தான் கிரியை செய்கிறான்.

நன்மைக்கு எதிராக தீமை உள்ளது. நல்லதுக்கு எதிராக கெட்டது உள்ளது. விசுவாசத்துக்கு எதிராக அவிசுவாசம் உள்ளது.
பரிசுத்தத்துக்கு எதிராக தூய்மைகேடு உள்ளது.
உண்மைக்கு எதிராக பொய்மை உள்ளது. சத்தியத்துக்கு எதிராக அசத்தியம் உள்ளது.
இயேசுகிறிஸ்துவுக்கு எதிராக எழும்புகிறவன் வேறொருவன் எனப்படுகிறான்.
– அவன் சுயத்தின்படி வருகிறவன்.
– அவன் மாமசத்தின்படி செயல்படுகிறவன், மாம்ச இச்சையுள்ளவன்.
– அவன் உலகத்தின் இச்சைகளையுடையவன்.
– அவன் தன்னை மிகைபடுத்துகிறவன், தன்னை புகழ விரும்புகிறவன். தனக்கு புகழ் சேர்க்க விரும்புகிறவன்.

இயேசுகிறிஸ்துவின் போதனைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மாறாக யார் செயல்பட்டாலும் – வேறு முறைகளை பின்பற்றினாலும் அந்நபர் வேறொருவரே.
இயேசுவின் வழி நடவாமலும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பதே வேறோருரின் ஆவியுள்ளவன் என்றே ஆகிறது.

மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாதவனும் வேறொருவனே.

நாம் நம்மில் தரபட்டுள்ள ஆவியினாலே இயேசுவோடு இணைந்து
Live With Jesus,
Walk With Jesus,
Work With Jesus என்போமா?.

மரணம் மட்டுமே நம்மை அவரிடமிருந்து பிரிக்கட்டும், அதுவும் மறுமையில் அவரோடு இணைவதற்காக.

கர்த்தாவே, உம் நாமத்தால் அனுப்பப்பட்ட இயேசுவின் நாமமேயன்றி வேறே நாமம் எங்களுக்கு தரப்படாதிருந்தும் நாங்கள் வேறொருவரின் கிரியைகளை வெளிப்படுத்துகிறவர்களாயிருக்கின்றோம். எங்களை மன்னியும். நாங்கள் உம் குமாரனின் நாமத்திலே பெலன் கொண்டு வாழ்வாங்குவாழ உம் ஆவியால் எங்களை பலபடுத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME