அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
Then, leaning back on Jesus breast, he said to Him,Lord, who is it? (John 13:25)
Gensis 44:4-12; Esther 7:5; Matthew 12:48; Matthew 16:13; Matthew 21:10; Matthew 26:68.
அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். (யோவான் 13:25)
ஆதியாகமம் 44:4-12; எஸ்தர் 7:5; மத்தேயு 12:48; மத்தேயு 16:13; மத்தேயு 21:10; மத்தேயு 26:68.
அவன் யார்?
பேதுருவின் குறிப்பை அறிந்துக்கொண்ட யோவான் இயேசுவிடம் அவன் யார்? யாரை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று வினவுகின்றார். இயேசுவோடு இணந்து செல்லுவதினாலும், அவரோடு நல்ல ஐக்கியம் இருப்பதினாலும் அவரிடம் கேள்வி கேட்கும் துணிவு யோவானுக்கு உண்டாயிற்று.
நாம் அறியாதவைகளையும் தெரியாதவைகலையும், புரியாதவைகளையும், இழந்தவைகளையும் குறித்து அவருக்கு மட்டுமே தெரியும். அவரோடு நல்ல உறவு இல்லாமல் அவைகளின் இரகசியத்தை நாம் அறிந்துக் கொள்ள இயலாது. நமது பெரு முயற்சிகள் பெருத்த தோல்வியையே உண்டாக்கும். அவரோடுள்ள நெருக்கத்துக்குள் நாம் எடுத்துக்கொள்ளும் சிறு முயற்சியும் பெரிய பலனைத் தரும்.
கிறிஸ்துவோடு இணைந்து நடக்க நாம் மனமற்று போவதினாலேதான் நமக்கு வரும் இடர்களிலிருந்து நாம் தப்பிக்க முடியவில்லை. அவரை நம்பினால் மட்டும்போதாது. அவரோடு நமக்கு உறவு இருக்க வேண்டும். அவர் விருப்பம் அறிய வேண்டும். அவர் விரும்புவதை நிறைவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் நமது தோல்விகளை முன்னதாகவே அறிந்துகொள்ள முடியும்.
கிறிஸ்துவுக்குள் என்ற சொல்லும், கிறிஸ்துவோடு என்ற சொல்லும் முக்கியமானது. இந்த வார்த்தைகளை விடவும் இதன் அனுபவங்கள் மிகவும் முக்கியமானது.
யாக்கோபு 4:8 ல் யாக்கோபு தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் என்கிறார். யோவானின் நெருக்கம் பயத்தை நீக்கி அறிவடைய செய்தது. நாம் அவரோடு இணைந்து வாழ்ந்தால் நமக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகமாகி ஆழமானவைகளை அறிந்து கொள்ளலாம். கேட்டு தெரிந்து கொள்ளவும் செய்யலாம்.
நாம் அவரின் சிநேகிதர். யோவான் 15:15.
அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். 2இராஜாக்கள் 6:8-12.