அன்பாயிருந்தவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தான்

அன்பாயிருந்தவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தான்

Now there was leaning on Jesus bosom one of His disciples, whom Jesus loved. (John 13:23)

John 13:25; John 1:18; John 21:20; John 11:3,5,36; John 19:26; John 20:2; John 21:7,24; Revelation 1:16-18; Gensis 37:3; 2 Samuel 12:3; Son8:5; Daniel 10:11.

அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனானயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். (யோவான் 13:23)

யோவான் 13:25; யோவான் 1:18; யோவான் 21:20; யோவான் 11:3,5,36; யோவான் 19:26; யோவான் 20:2; யோவான் 21:7,24; வெளி1:16-18; ஆதியாகமம் 37:3; 2சாமுவேல் 12:3; உன்னதப்பாட்டு 8:5; தானியேல் 10:11.

மார்பில் சாய்தல்:
கர்த்தராகிய இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவன் இயேசுவின் சீடர்களில் ஒருவனும், இயேசுவுக்கு அன்பாயிருந்தவனாக காணப்பட்ட யோவான் அப்போஸ்தலனேயாகும். இயேசுவின் நெருங்கிய இனத்தான் என்பதினாலும், சீஷர்களில் மிகவும் இளையவனும் 19 வயதுக்குட்பட்டவனுமாயிருந்ததினாலும், அவனுடைய அணுகுமுறை அவருக்கு பிடித்திருந்தது என்பதினாலும் இயேசு அவனிடம் அன்பாயிருந்திருக்கக் கூடும். அவன் இயேசுவின் அன்புக்குரியவனாய் நடந்துக் கொண்டான் என்பதை சுவிசேஷங்களை வாசிக்கும்போது நாம் அறிவோம்.

அன்பு என்ற சொல் இவ்விடத்தில் உண்மையான அன்பு என்றும், ஜீவனை விடவும் மேலாக நேசித்தல் எனவும், தன் உடமைகள் யாவும் உவந்தளிக்கும் அன்பு என்றும், தான் நேசிப்பவருக்காக எதையும் செய்யக்கூடிய அன்பு என்றும் பொருள் தரலாம்.

இயேசு யோவான் மேல் அன்பாயிருந்ததினால்தான் யோவானை தன் மார்பின் மேல் சாய்ந்துக்கொள்ள அனுமதித்தார். இயேசுவின் ஆழமான அன்பை உணர்ந்து கொண்ட, அனுபவித்த யோவான் தன் நூல்களை அன்பின் நூல்களாக எழுதினார்.

இயேசுவின் அன்பு நம்மேல் பெருக வேண்டுமெனில் நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளிலே நிலைத்திருக்க வேண்டும். யோவான்15:10; யோவான் 14:15. அன்பு பெருக வேண்டுமெனில் கீழ்படிதலை வெளிப்படுத்த வேண்டும். யோவான் இயேசுவுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. கடைசி வரையிலும் அவருக்கு உண்மையாகவே நடந்துக் கொண்டான். ஆகையினால்தான் விவிலியத்தின் கடைசி புத்தகத்தை அவனே எழுதினான். ஏறக்குறைய 100 வயது வரையிலும் வாழ்ந்தான்.

அன்பானவர்களே இயேசுவின் அன்பு உம்மில் பெருக நீர் அவருக்கும் அவர் வார்த்தைகளுக்கும் உண்மையாய் நடந்துக் கொள்வீராக. எதையும் முன்வந்து செய்வீராக. உம்மை நேசிப்பவர்களுக்கு முழுமனதோடு கீழ்படிவீராக. இதுவே கிறிஸ்தவ ஐக்கியம்.

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. யோவான்15:7-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME