நடப்பதற்கு முன்னமே உங்களுக்குச் சொல்லுகிறேன்

நடப்பதற்கு முன்னமே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

I tell you before it comes, that when it does come to pass, you may believe that I am He. (John 13:19)

John 1:15; John 8:23,24,58; Matthew 11:3; Revelation 1:17,18; Isaiah 43:10; Malachi 3:1.

அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 13:19)

யோவான் 1:15; யோவான் 8:23,24,58; மத்தேயு 11:3; வெளி1:17,18; ஏசாயா 43:10; மல்கியா 3:1.

முன்னமே அறிவிக்கிறேன்.
படைத்தவர் அனைத்தையும் அறிவார். நடப்பதையும், நடந்ததையும் நடக்க போவதையும் அறிவார். எல்லாம் அறியும் ஆற்றலும் ஞானமும் அவரிடம் இருப்பதினால் நடக்க போகிறவைகளை முன்னமே அறிவிக்கின்றார். அப்படி அறிவிக்கப்பட்டவைகள் விவிலியத்தில் தீர்க்கதரிசனங்களாக அறியப்படுகின்றது. இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பவன் குறித்து முன்னமே அறிவிக்கின்றார்.

மனிதனுக்குள் நடப்பவைகளையும் அறிகின்றார். மனிதனுக்கு வெளியே நடப்பவைகளையும் அறிவார். உலகத்தின் நடைமுறைகளையும் முன்னதாகவே அறிந்து தெரிவிக்கின்றார். உலகத்தின் முடிவையும் முன்னதாகவே அறிவிக்கின்றார்.

ஞானம் என்று பொய்யாய் பெயர் பெற்றிருக்கிறவைகளினாலும், கைரேகை நிபுணத்துவங்களினாலும் மற்றும் பல வகைகளினாலும் நடக்கபோகிறவைகளை கணிக்கின்றார்கள். ஆனால் அவைகளில் எதுவும் உண்மையாய் இருப்பதில்லை. இவ்விதம் கணிப்போர் தங்கள் வாழ்க்கைமுறைகளையும் கணிக்கவியலாதவர்களாகின்றனர். ஆனால் தேவனுடைய ஆவியை பெற்ற ஆதிமுற்பிதாக்களிலிருந்து இதுநாள் வரையிலும் உள்ள பரிசுத்தவான்கள் தங்களின் இறுதி அத்தியாயங்களை அறிகின்றவர்களாகவும் அறிந்து சகலவற்றையும் ஒழுங்குபடுத்துகிறவர்களாகவும் காணப்படுகின்றனர். தேவனுடைய ஆவியினாலேயன்றி ஒருவரும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டார். மறைவானவைகள் யாவும் தேவனுக்குரியவைகள். அவராலேயன்றி வேறு ஒருவராலும் அவைகளை அறியவோ, அவைகளின் இரகசியங்களை அறியவோ இயலாது. பழைய ஏற்பாட்டில் அனேக பரிசுத்தவான்கள் தேவனுடைய எச்சரிப்பை பெற்று ஆபத்துகளிலிருந்து காக்கப்பட்டுள்ளார்கள்.

நமது அறிவீனங்களினிமித்தமாகவோ, நமது இயலாமையினிமித்தமாகவோ வரப்போகிறவைகளை நாம்மால் அறிய இயலாமல் ஆகின்றது. ஆனால் தேவ ஆவியினால் எல்லாவற்ரையும் அறிய இயலும்.

உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 1கொரிந்தியர்2:7-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME