விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
you do not have His word abiding in u,because Him u do not believe. (john 5:38)
Jn5:42,46,47; Jn8:37,46,47; Jn12:44-48; Jn15:7;Col3:16; Jas1:21,22; 1Jn2:14; 1Jn3:9; Deu6:6-9; Jos1:8; Ps119:11; Pr2:1,2; Pr7:1,2; Isa26:10.
அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
(யோவான் 5:38)
யோவான் 5:42,46,47; யோவான் 8:37,46,47; யோவான் 12:44-48; யோவான் 15:7; கொலோசெயர் 3:16; யாக்கோபு 1:21,22; 1யோவான் 2:14; 1யோவான் 3:9; உபாகமம் 6:6-9; யோசுவா 1:8; சங்கீதம் 119:11; நீதிமொழிகள் 2:1,2; நீதிமொழிகள் 7:1,2; ஏசாயா 26:10.
தவறான உபதேசங்கள்:
விவிலியம் என்பது தேவன் தமது இருதயத்தில் உள்ளதை தாம் உண்டாக்கிய மனித வரலாற்றில் வெளிப்படுத்தியது ஆகும். இதனால் இதனை Mind of God எனலாம்.
அவர் தமது பரிசுத்த ஆவியினாலே தம்முடையவர்களுக்கு வெளிப்படுத்தியதே விவிலியம். எனவே, பரிசுத்த ஆவியின் துணையில்லாமல் விவிலியத்தை ஒருபோதும் ஒருவரும் புரிந்துகொள்ளவியலாது. 1கொரிந்தியர் 2:10,11.
விவிலிய வார்த்தைகள் மனித வரலாற்றில் வெளிப்பட்டவைதான். வரலாற்று சூழல்களில் வெளிபட்டதுதான். ஆனால் வரலாற்று சூழல்களிலிருந்தல்ல, தேவனின் ஆதி நோக்கத்தின் அளவீட்டிலிருந்தே வெளிபடுத்தியுள்ளார். எனவே, வரலாற்று சூழல்களை வைத்து விவிலியத்திற்கு பொருள் தருவது எழிதானதல்ல.
தேவன் ஒருபோதும் இன்னொரு மூலத்திலிருந்து எடுத்து மனிதனை வாழவைப்பவர் அல்ல, அவரில் இருந்து, அவரிடம் இருந்து எடுத்தே அவருக்கு நேராய் நடத்த போதிக்கிறார் என்பதை மறவாதீர்.
சமீபகாலமாக பலவிதமான தவறான விளக்கங்கள் உலா வருகின்றன. பரிசுத்த ஆவியின் நிறைவு இல்லாமல் எந்த வசனங்களையும் வியாக்கியானபடுத்தவியலாது.
தவறான உபதேசங்கள்:
1. வரலாற்று சூழல் சார்ந்து உண்டான தப்பறைகள்.
2. பிற சமய கருத்துக்களின் தாக்கத்தினால் உண்டான தப்பறைகள்.
3. வியாக்கியான தப்பறைகள்.
4. ஒரு வசனத்தை இன்னொரு வசனத்தோடு இணைப்பதில் உண்டான தப்பறைகள்.
5. எழுத்தார்த்த பொருள் அடிப்படையிலான தப்பறைகள்.
6. ஆவிக்குரிய பொருள் அர்த்தம் அடிப்படையிலான தப்பறைகள்.
7. இறையியல் சித்தாந்த தப்பறைகள்.
இந்த தப்பறைகள் உருவாக காரணம்.
1. பரிசுத்த ஆவியின் கட்டுபாட்டுக்குள் இல்லாமை.
2. விவிலியத்தை பிற இலக்கியங்களோடு ஒப்பிடுவது.
3. விசுவாசம் இல்லாமை.
4. தேவ அன்பு இல்லாமை.
5. கற்றுகொள்ளும் மனோபாவத்துக்கு இடம் தராமை.
6. முதிர்ந்த தேவ மனிதர்களின் ஆலோசனைகளை மதியாமை.
7. Immoral Activities.
தப்பறை நீரோட்டங்கள் உள்ள மனகளத்துமேட்டில் ஜீவ வார்த்தைகள் ஒருபோதும் முளைத்தெழாது.
ஏனெனில் அங்கே ஜீவன் இல்லை. ஜீவனுள்ள இடத்தில்தான் ஜீவ வார்த்தைகள் முளைக்கும்.
விவிலியம் மாறாதது.
விவிலியத்தை மாற்றவியலது.
கர்த்தாவே, உமது வார்த்தைகளை நீர் எங்களுக்கு தந்த பரிசுத்த ஆவியினாலும், விசுவாச வாழ்வினாலும், பரிசுத்த ஜீவியத்தினாலும் புரிந்துகொள்வதற்கு பதில் எங்கள் மூளை அறிவினாலும், புற அனுபவங்களினாலும் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றோம். எங்களை மன்னியும். ஜீவனுள்ள வார்த்தைகளை சாவை தேடியோடும் மனிதர்களிடத்தில் தேடுவதை விட்டுவிட எங்களுக்கு உதவி செய்யும்.