ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல.
I say to you, a servant is not greater than his master. (John 13:16)
John 15:20; Matthew 10:24,25; Luke 6:40; Matthew 11:11; Matthew 12:6.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. (யோவான் 13:16)
யோவான் 15:20; மத்தேயு 10:24,25; லூக்கா 6:40; மத்தேயு 11:11; மத்தேயு 12:6.
எஜமானே பெரியவர்:
இப்பகுதியில் ஊழியக்காரனும், எஜமானும் ஒப்பிடப்படுகிறார்கள். ஊழியக்காரன் யார்? ஊழியக்காரன் என்பார் எஜமானுக்கு கட்டுப்பட்டவன், எஜமானின் விருப்பத்தை மட்டுமே சுமக்கிறவன், எஜமானால் கட்டுபடுத்தப்படுகிறவன், எஜமானிடம் உரிமைகோரல்கள் எதையும் வைக்காதவன், தன் பிழைப்பை குறித்தோ தன் தேவைகள் குறித்தோ சிந்திக்காதவன், தன் எதிர்காலம் குறித்தும் சிந்திக்காதவன், எஜமானனின் நலத்தையும் மேன்மையையும் தரிசனத்தையும் மட்டுமே கொண்டிருப்பவன், எஜமானுக்காக எஜமானின் குடும்பத்துக்காக எஜமானின் பணிகளுக்காக தன் ஜீவனை கொடுக்கக்கூட துணிந்தவன், தன்னை தண்டிப்பவர் முன்பாக எதிர்வினையாற்ற தெரியாதவன், இன்னும் பல. இவனே ஊழியக்காரன்.
எஜமான் எப்பொழுதும் உயரத்தில் இருப்பவர், மேற்பார்வையிடுகிறவர், எதிர்கால வெளிச்சமுடயவர், எதை செய்தாலும் நிகழ்கால நன்மையைவிட எதிர்கால நன்மையையே பிரதானமாகக் கொள்கிறவர், தன் விருப்பத்தை ஊழியக்காரன்மேல் திணிப்பவர், கண்டிப்பவர், தண்டிப்பவர், கொடுத்தும் எடுக்கிறவர், இன்னும் பல. இவரே எஜமான்.
ஊழியக்காரன் எஜமானின் சரீரமாகிய தோட்டத்துக்குள் பணி செய்ய கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருப்பதினால் வேண்டாமென்றோ போதுமென்றோ சொல்வதுவரையிலும் பணி செய்ய நியமனம் பண்ணப்பட்டவர். தன்னை மேற்பட்டவனாகவோ பிரதனமானவனாகவோ தன் கீழ் இருப்பவர்களை தன்னிஷ்டம் போல் நடத்த உரிமை பெற்றவனாகவோ கருத முடியாது. அவருடைய நற்றுக்களை பரிதீலித்து சுத்தபடுத்தி மிகுந்த கனிகொடுக்கதக்கதாக மாற்றுவதே ஊழியம். கனிகள் தக்கானவைகளல்ல தேவனுக்குரியவைகள்.
ஒரு ஊழியன் தன் கையில் தரப்பட்டுள்ள விசுவாசிகளை தேவனுக்கென்று கனிகொடுக்கிறவர்களாக மாற்றுவதுதான் அவசியமானதாகவும், அவசரமாகவும் செய்ய வேண்டியது.
மேற்பட்டவனாக இருக்க நினைத்தாலே மேற்பட்டவரால் தூக்கி எறியப்படுவாய். எச்சரிக்கை.
சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிலிப்பியர் 3:17-20.