நான் கழுவியிருக்க நீங்களும் கழுவுங்கள்

நான் கழுவியிருக்க நீங்களும் கழுவுங்கள்.

If I then,ur Lord and Teacher,have washed ur feet,u also ought to wash one another feet. (John 13:14)

Matthew 20:26-28; 2Corinthians 8:9; Philippians 2:5-8; Hebrews 5:8,9; Hebrews 12:2; Acts 20:35; Romans 12:10,16; Romans 15:1-3; 1Corinthians 8:13; 1Corinthians 9:19-22; 2Corinthians 10:1; Galatians 6:1,2; 1Peter 4:1; 1Peter 5:5.

ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். (யோவான் 13:14)

மத்தேயு 20:26-28; 2கொரிந்தியர் 8:9; பிலிப்பியர் 2:5-8; எபிரெயர் 5:8,9; எபிரெயர் 12:2; அப்போஸ்தலர் 20:35; ரோமர் 12:10,16; ரோமர் 15:1-3; 1கொரிந்தியர் 8:13; 1கொரிந்தியர் 9:19-22; 2கொரிந்தியர் 10:1; கலாத்தியர் 6:1,2; 1பேதுரு 4:1; 1பேதுரு 5:5.

நானே செய்திருக்க நீங்கள் செய்யாதிருப்பது எப்படி?
கர்த்தராகிய இயேசு ஆதாமையோ, ஆபிரகாமையோ, மோசேயையோ, தாவீதையோ, எலியாவையோ பின்பற்றவில்லை. அவர்களெல்லாரும் தேவனால் வழிநடத்தப்பட்டார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ இவர்களை பின்பற்றாமல் தம் தந்தையையே பின்பற்றினார். அவர் யூத சமய கல்வியை கற்றிருந்தாலும், யூத சமய சடங்குகளை அறிந்திருந்தாலும் பிதாவினால் கற்பிக்கப்பட்டதும், ஒப்புக்கொடுக்கப்பட்டதும், செய்யும்படி பணிக்கப்பட்டதும், காண்பிக்கப்பட்டதுமான வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறையையும், உபதேச பரிவர்த்தனைகளையும் வெளிபடுத்தி போதித்தார். தம் தந்தையின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலே மட்டுமே கவனமாயிருந்தார். அவர் ஒருபோதும் தமது பின்னடியார்கள் தம்மை தவிர வேறு எவரையும் பின்பற்றும்படியும், வேறு எவரிடமிருந்து கற்றுக்கொள்ளும்படியும் போதிக்கவில்லை. தாம் அடையாளம் காட்டும் பரிசுத்த ஆவியானவர்கூட தம்மை மட்டுமே வெளிபடுத்துவார், தம் உபதேசத்தை மட்டுமே வெளிபடுத்துவார் என்றுக் கூறினார். எனவே இயேசு என்ன சொன்னாரோ, எதை செய்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ அப்படி நடந்துக் கொள்வதை மட்டுமே அவர் விரும்புகிறார்.

நானே மனத்தாழ்மையுடன் நடந்துக் கொண்டேனானால் நீங்களும் அப்படியே நடந்துக்கொள்ள வேண்டும். நானே அடிமையைபோல நடந்துக் கொண்டேனானால் நீங்களும் அடிமையைபோல நடந்துக் கொள்ள வேண்டும்.

நான் சொல்லாததை சொல்லுவதும், நான் செய்யாததை செய்வதும், நான் விரும்பாத வாழ்வை வாழ்வதும் மறுபடியும் நம்மை கழுவபட ஒப்புக்கொடுக்கவே வைக்கும் என்பதை மறக்க வேண்டாம். நான் அவரையே பார்க்கின்றேன்; நான் அவர்போலவே வாழ ஆசைப்படுகிறேன்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:7-10

சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு5:9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME