நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்

நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்.

You call Me Teacher and Lord, and you say well, for so I am. (John 13:13)

John 11:28; Matthew 7:21,22; Matthew 23:8-10; Luke 6:46; Romans 14:8,9; 1Corinthians 8:6; 1Corinthians 12:3; Philippians 2:11; Philippians 3:8; 2Peter 1:14-16.

நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். (யோவான் 13:13)

யோவான் 11:28; மத்தேயு 7:21,22; மத்தேயு 23:8-10; லூக்கா 6:46; ரோமர் 14:8,9; 1கொரிந்தியர் 8:6; 1கொரிந்தியர் 12:3; பிலிப்பியர் 2:11; பிலிப்பியர் 3:8; 2பேதுரு 1:14-16.

நான் அவர் தான்:
கர்த்தராகிய இயேசு போதகர் என்றும், ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். போதகர் என்றச் சொல் தோராவை கற்றறிந்த கல்விமான்களுக்கும், அதில் பாண்டித்தியம் பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட பெயராக இருந்தது. இயேசுகிறிஸ்துவும் தோராவை நன்கு அறிந்தவராக இருந்ததினாலும், சீஷர்களுக்கு கற்பிக்கும் குருக்களை போலிருந்ததினாலும் போதகர் என்று அழைக்கப்பட்டார்.

போதகர் என்பார் போதிப்பவர் என்று பொருள். போதகர்களாயிருப்பவர்களுக்கு அதிக ஆக்கினை உண்டு என்பதை அறிந்து நேர்மறையாகவும், சத்தியத்தின்படியேயும், வழுவாதன்மையுடனும் போதிக்க வேண்டும். எந்த ஒன்றுக்கும்போதகத்தை இணைத்து பொருள் கொள்ளலாகாது. கிறிஸ்துவை போதிக்கிறவன், விவில்யத்தை போதிக்கிறவன் அதன் மாண்பையும், சிறப்பையும் எவற்றோடும், எவரோடும் ஒப்பிட்டு பேசலாகாது. அதிக ஆக்கினை உண்டு. கர்த்தராகிய இயேசு தேவ இராஜ்ஜியத்தை குறித்து பேசினார். மரணமே வந்தாலும், தலை சாய்க்க இடம் இல்லாதிருந்தாலும் சத்தியத்தை சத்தியமாகவே பேசினார்.

கர்த்தராகிய இயேசு ஆண்டவர் என்றும், கர்த்தர் என்றும் பல நேரங்களில் அழைக்கப்பட்டார். என்றாலும் அவர் மரித்து உயிரோடெழுந்த பின்பே கர்த்தர், ஆண்டவர் என்று அதிகமாக அழைக்கப்பட்டார். பல எஜமான்கள், ஆண்டவன்மார்கள், கர்த்தாக்கள் இருந்தாலும் இயேசுகிறிஸ்து மட்டுமே மரித்தும் எழுந்தும், பிழைத்துமிருக்கிறதினால் ஆண்டவர், கர்த்தர் எனப்படுகிறார். எல்லாவற்றையும் ஆள்கிறவர் அவரே. எல்லாவற்றின்மேலும் உரிமை உடையவரும் அவரே. எல்லாராலும் ஜெயிக்கமுடியாத பாவத்தையும், சாபத்தையும், மரணத்தையும் ஜெயித்தவர் இவரே. இவ்வுலகையும் ஜெயிக்கப் போகிறவரும் இவரே. புது உலகையும் நிர்மாணிக்கப் போகிறவரும் இவரே. இவருக்கு இணையாக மதங்களோ, இனங்களோ, நூல்களோ ஒன்றுமில்லை. இவரை குறித்து விவிலியம் தவிர எந்த புராண நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. விவிலியம் தேவனுடைய வார்த்தை. தேவனுடைய வார்த்தை கிறிஸ்துவே. இவரே ஆண்டவர். இவரே கர்த்தர்.

ஆண்டவரும் இவரே, ஆள்கிறவரும் இவரே, ஆளப்போகிறவரும் இவரே. இயேசுவே ஆண்டவர், இயேசுவே கர்த்தர், இயேசுவே போதகர்.

எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். எபேசியர் 1:20-23.

ADD YOUR COMMENT

Powered By Indic IME