நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்

நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்.

What I am doing you do not understand now, but you will know after this. (John 13:7)

John 13:10-12; John 12:16; John 14:26; James 5:7-11; Isaiah 45:15; Daniel 12:8,12; Habakkuk 2:1-3.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இன்மேல் அறிவாய் என்றார். (யோவான் 13:7)

யோவான் 13;10-12; யோவான் 12:16; யோவான் 14:26; யாக்கோபு 5:7-11; ஏசாயா 45:15; தானியேல் 12:8,12; ஆபகூக் 2:1-3

இனிமேல் அறிவாய்:
விவிலியத்தில் தேவனின் மறைபொருள் வாக்குகளும், தேவனின் மறைபொருள் செயல்களும் காணப்படுவதை நாம் அறிவோம். இவைகளின் விளக்கங்களை அறிந்துக்கொள்வது எளிதான காரியமல்ல. இவைகளை அறியும்படிக்கு தேவன் தமது ஆவியை தம்முடையவர்களுக்குக் கொடுத்துள்ளார். மறைபொருளாய் காணப்படுகிற யாவும் தேவனுடையவைகளாகும். தேவனுடையவைகளை தேவனுடைய ஆவியினாலேயன்றி வேறு எவ்விதத்திலும் அறிய இயலாது.

இயேசுகிறிஸ்து பேதுருவிடம் தான் செய்கிறதை இப்பொழுது அறியமாட்டாய், பின்னர் அறிவாய் என்கிறார். இயேசுகிறிஸ்துவின் மரணத்துக்கு பின்பு, பரிசுத்த ஆவியின் பொழிந்தருளுதலுக்கு பின்பு அறிந்துக்கொள்வாய் என்பதாகும். இதன் பொருளென்ன?. எல்லாரும் சுத்தமாயிருக்கவில்லை என்பதும், இவர்களில் ஒருவன் காட்டிக்கொடுப்பான் என்பதையும் பேதுரு பின்னாளில் அறிவார். இதனை பேதுரு அப்போஸ்தலர் 1:16-20 ல் குறிப்பிடுகின்றார்.

இயேசுகிறிஸ்து சீஷர்கள் யாவரையும் சுத்தமாக்கினார். சுத்தமாக்கப்பட்டும் ஒருவன் சுத்தமாகாமலும் இயேசுவுக்கு விரோதமாக செயல்பட்டும் இருப்பதை யூதாஸின் தனிப்பட்ட வீழ்ச்சி என்று அறிந்துக்கொண்டார். அவனை மீட்டெடுக்க முயற்சித்தும் அவன் மீட்கபடுதலுக்குள்ளாகவில்லை. அவன் விலகிபோவதை அறிந்த இயேசு அவனை சுத்தமாக்கவும், அவனால் மீதியுள்ளவர்கள் அசுசிபடலாகாது என்றும் முன்னதாக அறிந்து மறைமுகமாக இக்காரியத்தைச் செய்தார்.

தேவன் நம் வாழ்வில் செய்யும் சிலகாரியங்களை நாம் எளிதாக அறியமுடியாது. ஆனால் காலம் நிறைவேறும்போது தமது ஆவியினால் அவைகளை நமக்கு வெளிபடுத்துகிறார்.
அறியாதவைகளைக் குறித்து அறிவீனமாக இருந்தாலும் பரவாயில்லை, அறிந்திருப்பவைகளில் அறிவீனமாய் இருக்க வேண்டாம்.

ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. எபிரெயர் 6:4-8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME