இயேசு முடிவுபரியந்தமும் சீஷர்களாகிய அவர்களிடத்தில் அன்பு வைத்தார்.
having loved His own who were in the world, He loved them to the end. (John 13:1)
John13:34; John 15:9,10,13,14; John 17:9,10,14,16,26; Romans 8:36,37; Ephesians 5:25-27; 1John 4:19; Revelation 1:6; Jeremiah 31:3.
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். (யோவான் 13:1)
யோவான் 13:34; யோவான் 15:9,10,13,14; யோவான் 17:9,10,14,16,26; ரோமர் 8:36,37; எபேசியர் 5:25-27; 1யோவான் 4:19; வெளி 1:6; எரேமியா 31:3
அன்பு வைத்த இயேசு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது சீஷருக்கு அப்போஸ்தலர்கள் என்றும், சீஷர்கள் என்றும், ஊழியக்காரர்கள் என்றும், சிநேகிதர்கள் என்றும் பெயரிட்டு அழைத்தார். அவர்களுக்கு போதித்தார், அவர்களை கடிந்துணர்த்தினார். அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்களிடம் உண்மையான அன்பு வைத்தார். அவர்களோடு இருப்பதாகவும் வாக்கு கொடுத்தார்.
இப்பகுதியில் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம் அன்பு செலுத்துவதாக கூறுகின்றார். இறுதிவரையிலும் தமது அன்பு அவர்களிடம் இருக்கும் என்கிறார். சீஷர்கள் இரத்தசாட்சியாய் மரிக்கும் இறுதி நேரம் வரையிலும் அவர்களை நேசித்து அன்பு காட்டுவதாக கூறுகின்றார். இதனால் சீஷர்கள் உத்வேகம் கொண்டு மரிப்பதற்கும் துணிந்தார்கள். ஜீவனை அற்பமாய் எண்ணினார்கள்.
அன்பானவர்களே இயேசு தமது ஊழியக்காரர்களாகிய நம்மை இறுதி வரையிலும் நேசிக்கிறார். இந்த அன்புக்கு ஈடாக, உலகமோ, ஆஸ்தியோ, பணமோ, பதவியோ, குடும்பமோ, உறவுகளோ, படிப்புகளோ, நண்பர்களோ இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமது சீஷர்களிடம் இயேசு காட்டிய அன்பு அகாப்பே அன்பாகும். உள பூர்வமாக சிநேகித்தல், ஜீவனைக் கொடுத்து சிநேகித்தல், தெய்வீக அன்பு என்பதாகும். உங்களுக்காக என் ஜீவன் வரையிலும் கொடுப்பேன். என் ஜீவன் உங்களது இறுதி நேரத்தில் பெலனாக, தைரியப்படுத்துகிறதாக, நம்பிக்கை யூட்டுவதாக, மறு ஜீவன் தருவதாக இருக்கும். தைரியமாய் கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவின் இராஜ்யத்துகாகவும் நில்லுங்கள்.
இக்காலத்தில் நம்மை பாதுகாப்பதற்கும், இறுதி காலத்தில் பயன்படும்படியாகவும் பல உபகரணங்களை உண்டாக்கி ஒத்தாசையாக வைத்துள்ளோம். ஆனால், அவைகள் ஒன்றும் நித்தியம் வரையிலும் கொண்டு செல்லாது. சங்கீதம் 49:12-20 ஐ வாசித்து பார்ப்போம். இயேசுவின் ஜீவ அன்பு மட்டுமே நம்மோடு நம் இறுதி நேரத்தில் நிற்கும் அவர்மட்டுமே மரணத்தை அனுபவித்து ஜீவன் பெற்று நமக்காய் நிற்பவர்.
ஊழியம் செய்யுங்கள். உங்கள் போதகரோடு இணைந்து சுய வெறுப்புடன் பிரதிபலன் பாராது திருப்பணி செய்யுங்கள்.
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:36-39