இதோ திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:8)
இது யாருக்கு?
பிலதெல்பியா சபைக்கு…
பிலதெல்பியா என்றால் சகோதர சிநேகம் என்று பொருள்.
பிலதெல்பியா பட்டணத்திலுள்ள சபைக்கு வாக்குறுதியாக இந்த வாக்கை தருகிறார்.
ஏன் இந்த வாக்குறுதி தரப்பட்டது?
- பிலதெல்பியா சபை சகோதர சிநேகம் உள்ள சபை.
பிலோஸ் என்றால் அன்பு என்றும், அடல்பாஸ் என்றால் சகோதரர் என்றும் பொருளாகும்.
எபிரெயர் 13:1 ல் சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது என்கிறார்.
1தெசலோனிக்கேயர் 4:9 ல் இரட்சிக்கபட்டவர்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதே சகோதர சிநேகம் என்கிறார்.
1பேதுரு 1:22 ல் மாயமற்ற சகோதர சிநேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்கிறார். உதட்டில் ஒன்று, உள்ளத்தில் ஒன்று என்றல்ல உண்மையான சிநேகம்.
ரோமர்12:10 ல் சகோதர சிநேகத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள் என்கிறார்.
யோவான் 15:13 ல் ஒருவன் தன் சிநேகிதனுக்காக ஜீவனை கொடுக்கிற அன்பிலும் மேலான அன்பு இல்லை என்கிறார் இயேசு.
சகோதர சிநேகத்தை விட்டு விடாதிருங்கள். - கிறிஸ்துவின் நாமத்தை மறுதலிக்காத சபை. வெளி 3:8.
பெலன் இல்லாதபோதும் அவரை மறுதலிக்கவில்லை.
குறைவு இருந்தபோதும் அவரை மறுதலிக்கவில்லை.
சாவே வந்தாலும் மறுதலிக்காத சபை.
போராட்டங்கள் இருந்த போதும் அவரை மறுதலிக்காத சபை
இயேசுவை கர்த்தர் என்றும், ஆண்டவர் என்றும் அறிக்கை செய்த சபை. 2கொரிந்தியர் 4:5;பிலிப்பியர் 2:11.
உரோம தேசாதிபதியல்ல இயேசுவே கர்த்தர் என்று அறிக்கையிட்டனர்.
பெர்கமு சபையை பார்த்து சொல்லுகிறார்… வெளி 2:13.
நாம் பணத்துக்காகவும், வேலைக்காகவும், சலுகைக்காகவும் இயேசுவை மறுதலித்ததை வெட்டு வெளியே வாருங்கள். கிறிஸ்துவை முழுமையாய் பின்பற்றி திறந்த வாசலை பெறுங்கள்.
வாசிக்கலாம்.. 1தீமோத்தேயு 6:21,9,10,11,12. - கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொண்ட சபை. 3:8.
இந்த வசன வைராக்கியம் இருந்ததினால்தான் அவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனையில் தப்பினார்கள், உபத்திரவத்திலும் பொறுமையை காத்தார்கள். வசனம் 9,10.
தெசலோனிக்கே சபையாரும் வசனத்தை பின்பற்றி மாதிரிகளானார்கள் 1தெசலோனிக்கேயர் 1:6,7.
வசனம் உள்ளே இருந்தால்தான் மாதிரியாயிருக்க முடியும்.
ஜெபத்தில், செய்தியில், ஆலோசனையில், கலந்துரையாடலில் வசனம் வெளிப்பட வேண்டும். கொலோ4:6.
எனவே கொலோசெயர் 3:16 ஐ வாசிப்போம்.
இந்த சபைக்கு திறந்தவாசல் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் இவர்களைப்போல் களைய வேண்டியவைகளை களைந்து, அழிக்க வேண்டியவைகள அழித்து, ஒழிக்க வேண்டியவைகளை ஒழித்து, எரிக்க வேண்டியவைகளை எரித்து, சொல்லப்படக்கூடாதவைகளை தவிர்த்து பிலதெல்பியா சபையை போலிருந்தால் உனக்கும் திறந்த வாசல் உண்டாகும்.
எவைகளிலெல்லாம் திறந்தவாசல் உண்டாகும்?
- ஒளிப்பிடத்திலும் மறைவிடத்திலும் உள்ள புதையலை பெற.. ஏசாயா 45:4.
- வசனம் போகாதபடிக்குள்ள தடைகளின் மத்தியில் திறந்தவாசல். கொலோசெயர் 4:4. உள்ளே போய் ஏசாயா 58:6,7.
- உபத்திரவங்களில் திறந்தவாசல். அப்போஸ்தலர் 16:16-36.
- மரணகுழிகளில் அகப்படுகிறவர்களுக்கு திறந்த வாசல். மத்தேயு 27:52, லாசரு.
- புறக்கண்கள் அடைக்கப்பட்டிருக்க அககண்களாகிய திறந்தவாசல். சங்கீதம் 119:18; லூக்கா 24:45.
- பாறையின் கடினத்தை உடைத்து தாகம் தீர்க்கப்பட்டது ஒரு திறந்த வாசலாகும். சங்கீதம் 105:41, ஏசாயா 55:1.
- உன் ஜெபத்துக்கு பரலோகம் திறக்கும். 2நாளாகமம் 6:20,7:15.
இதோ திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார். உள்ளே நுழைந்து நன்மை பெற்றுக்கொள். ஒருவரும் அவர் திறந்த உனது திறந்தவாசலை மூட முடியாது. ஆமென்.