களைந்துபோட வேண்டியவை

களைந்துபோட வேண்டியவை

களைந்துபோட வேண்டியவை: எபேசியர் 4:22-24.
கிறிஸ்தவ கடமைகளை சரிவர செய்து பழகியிருக்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம்.
கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சபையாக இருக்க வேண்டும் என்பதும் பவுலின் விருப்பம்.
அதன் அடிப்படையில் மூன்று பொறுப்புகளை மூன்று வசனங்களில் கூறுகின்றார் பவுல்.

  1. களைந்துப் போடுங்கள். வசனம் 22. Put off – அணைத்துப்போடுங்கள் என்று அர்த்தம்.
    எவைகளை?
    பழைய மனிதனை களைய வேண்டும்.
    எப்படி பழைய மனுஷனானான்?
    மோசம் போக்கும் – வஞ்சிக்கும் – ஏமாற்றும் இச்சைகளால் கெட்டுப்போனான், கறைபட்டுப்போனான்.
    எனவே இவனை வெளியேற்ற வேண்டும்.
    இரட்சிக்கபடுமுன்பிருந்த பல்வேறு சுபாவங்களை களைய வேண்டும். ஜாதி சார்ந்த, கட்சி சார்ந்த, இனம் சார்ந்த, மொழி சார்ந்த, உறவு சார்ந்த சுபாவங்களை களைய வேண்டும். பெற்றோரின் கெட்ட சுபாவங்களை களைய வேண்டும்.
    இரட்சிக்கபடுமுன்பிருந்த பல்வேறு பழக்கங்களை களைய வேண்டும். சோம்பல், உற்சாகமின்மை, நேரம் தாழ்த்துதல், அதிக தூக்கம், நண்பர்கள், கண்ட இடத்திலெல்லாம் தூங்கி வழிதல், பெருந்தீனி போன்றவைகள் யாவும் களையபட வேண்டும்.
    உணர்வற்ற தன்மை, புத்திகூரற்ற தன்மை, மதியற்றவைகள் யாவையும் களையபட வேண்டும். எபேசியர் 5:16,17.
  2. உள்ளத்தில் புதிய ஆவியால் நிரம்ப வேண்டும். வசனம் 23. எபேசியர் 5:18-21. ரோமர் 8: 9-11 ன் படி அவருடைய ஆவியால் நிரம்ப வேண்டும்.
    இந்த ஆவிதான் உங்கள் உள்ளத்தை பழைய தன்மையிலிருந்து புதுப்பித்துக் கொண்டேயிருப்பது.
    இந்த ஆவி வசனத்துக்கு நேராக கொண்டு செல்லும்.
    உள்ளொளி அதிகரிக்க வேண்டும்.
    மனபலம் அதிகரிக்க வேண்டும்.
    சந்தோஷம் ஆறுதல் பெருகும்.
    எபேசியர் 1:15-19; எபேசியர் 3:15-19.
  3. புதிய மனுஷனை தரித்துக்கொள். வசனம் 24.
    எப்படிபட்ட புதிய மனுஷன்?
    தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன்.
    எப்படிபட்ட தேவ சாயல்?.
    மெய்யான நீதி, பரிசுத்தத்தில் விளங்கும் தேவ சாயல்.
    புதிய மனுஷனாகிய கிறிஸ்து உணக்குள் இருப்பதால் முன்னிருந்ததை விடவும் பலசாலியாக, ஆரோக்கியமாக, அறிவாளியாக, பரிசுத்தமாக காணப்படுவாய்.
    சுறுசுறுப்பாய் இருப்பய். ஒன்றை செய்ய சொன்னால் அருகில் உள்ளதையும் சேர்த்துசெய்யும் புத்திக்கூர்மை.
    ஆரோக்கியமாய் இருப்பாய். பலவீனமாயிருந்தாலும் பலசாலியாய் காணப்படுவாய்.
    அறிவாளியாக இருப்பாய். காரியங்களை யூகித்து செய்யும் திறன், காரிய சித்தி, சொல்லாமலேயே காரியங்களை அறிந்து செய்யும் வாஞ்சை போன்றவைகள் காணப்படும்.
    மனசாட்சி. எதை செய்தாலும், என்ன பேசினாலும் நான் சரியாய் செய்தேனா?, சரியாய் பேசினேனா? தேவன் பிரியபட்டாரா?, போதகருக்கு இது பிடிக்குமா?, சபைக்கு இது பயன் தருமா? என்று தன் உள்ளத்தையே அறியும் கண்ணாடியை கொண்டிருப்பாய். மனசாட்சியின் பேரொளியே புதிய மனுஷனின் மையம்.

களைந்துபோடுதல் இல்லாமல் தரித்துக்கொள்ளுதல் மாய்மாலம்.
ஒருவன் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். மத்தேயு 9:16,17.

ADD YOUR COMMENT

Powered By Indic IME