பழையவைகள் ஒழிந்துபோயின

பழையவைகள் ஒழிந்துபோயின.

old things have passed away; behold, all things have become new. (2Cor 5:17)

Isaiah 43:18; Isaiah 65:17; Isaiah 51:6; Matthew 9:16,17; Matthew 24:35; Romans 7:6; 1Corinthians 13:11; Philippians 3:7-9; Colossians 3:1-10; 2 Peter 3:10-13.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:17)

ஏசாயா 43:18; ஏசாயா 65:17; ஏசாயா 51:6; மத்தேயு 9:16,17; மத்தேயு 24:35; ரோமர் 7:6; 1கொரிந்தியர் 13:11; பிலிப்பியர் 3:7-9; கொலோசெயர் 3:1-10; 2பேதுரு 3:10-13

ஒழிந்துபோகின்றவை:
கிறிஸ்துவுக்குள் பழையவைகள் ஒழிந்துபோக வேண்டும் என்பதே பவுலின் விருப்பம். தமது சபை மக்கள் தேவனுடைய குமாரனை உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க அனுமதித்தபின்பு இனி பழையவைகளைக் கொண்டு வாழ்க்கை நடத்தவோ, பழையவைகளை போதிக்கவோ, பழையவைகளை கற்றுக்கொள்ளவோ, கற்பிக்கவோ, பழையவைகளை அனுபவிக்கவோ செய்யாது மாற்றமடைந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். ஒழித்துவிட வேண்டியவைகளை உள்ளத்திலும் இல்லத்திலும் குணத்திலும் ஒழித்து வாழ்வது பழையவைகளின் தொந்திப்பாகும்.

பாவத்தினால் பாதிப்படைந்த சகல சிருஷ்டிகளையும், வானம் பூமி சமுத்திரத்தையுமே ஒழியபண்ண தேவன் தீர்மானித்து விட்டாரென்றால் இன்னும் பழையவைகளோடு சல்லாபம் செய்து வாழ்வது ஒழிக்கப்படுவதற்கே ஏதுவாகும். பழையவைகளை ஒழித்துவிடாமல் புதியவைகளை வரவேற்பதும், அனுபவிக்க துடிப்பதும் எவ்விதத்தில் நியாயம். அது தேவனுக்கு பிரியமாயிருப்பதில்லை.

குணத்திலும், மணத்திலும், தோற்றத்திலும், நடக்கையிலும், பேச்சிலும், செயலிலும், பார்வையிலும், பழக்கவழக்கங்களிலும், உறவுகளிலும், கொடுக்கல் வாங்கல்களிலும், உடையிலும், நடையிலும் புது சிருஷ்டியை காண்பிக்க வேண்டும். புது சிருஷ்டியாகிய உள்ளில் பிறந்த இயேசுவை காண்பிக்க வேண்டும்.

எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர்3:7-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME