இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்

இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

Behold, the virgin shall conceive and bear a Son, and shall call His name Immanuel. (Isaiah 7:14)

Isaiah 8:8; Isaiah 9:6; Isaiah 11:1; Gensis3:15; Jer 31:22; Matthew 1:22,23; Matthew 28:19,20; John 1:1,2,14; Romans 9:5; 1 Timothy 3:16.

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். (ஏசாயா 7:14)

ஏசாயா 8:8; ஏசாயா 9:6; ஏசாயா 11:1; ஆதியாகமம் 3:15; எரேமியா 31:22; மத்தேயு 1:22,23; மத்தேயு 28:19,20; யோவான் 1:1,2,14; ரோமர் 9:5; 1தீமோத்தேயு 3:16.

ஏசாயா கண்ட குழந்தை இயேசு:
விவிலிய அறிஞர்கள் கணக்கியியல் படி இயேசுகிறிஸ்துவின் பிறப்பிற்கு 800 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவின் பிறப்பைக் கண்டார்.

ஆதிியாகமம் 3:15 ன் படி ஸ்திரீயின் வித்தாக தோன்றி சர்ப்பத்தின் தலையை நசுக்குவார் என்று வெளிபடுத்தப்பட்டது. இந்த ஸ்திரீயை ஏசாயா மட்டுமே கன்னிகையாகக் கண்டார். திருமணமான பெண்களினால் அல்லது புருஷனை கொண்டு குழந்தையை பெற்றெடுக்கும் உலகியியல் முறைமைக்கு மாறாக திருமணமாகாத ஒரு கன்னிபெண் குழந்தையை பெற்றெடுப்பாள் என்று கண்டார்.

ஏசாயா கன்னியை கன்னிமை குலையாதவளாகவும், கற்புள்ளவளாகவும், தூய்மையானவளாகவும் கண்டார்.

பாருங்கள், கன்னிபெண் குழந்தையை பெற்றெடுப்பாள். அதுவே ஸ்திரீயின் வித்து என்றார். கன்னியை கண்ட ஏசாயா அவள் பெற்றெடுத்த குழந்தையையும் கண்டார்.

ஏசாாய 9:6 ல் அந்த குழந்தை எப்படியிருக்கும் என்பதையும் கண்டு வெளிபடுத்தியுள்ளார். இந்த குழந்தை ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றும் என்றும் கண்டார். ஏசாயா 11:1.

கன்னியை கண்ட ஏசாயா குழந்தையையும் கண்டு தீர்க்கமுரைத்துள்ளதை இவ்வுலகம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது.

எரேமியா 31:22 ல் கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையை செய்வார் என்று கூறிய பிந்திய கால எரேமியாவால் நம்பப்பட்டிருக்க கிறிஸ்தவ விற்பன்னர்களால் நம்ப முடியாததாக தெரிகிறது. ஏசாயா குழந்தையை கண்டதுபோல நாமும் வரப்போகிற இயேசுவை காணும் கண்கள் உடையவர்களாய் இருந்தால் மட்டுமே வரப்போகிற அழிவுக்கு தப்புவோம்.

உலகியல் காரியங்களை காணும் கண்களைவிட தெய்வவியல் காரியங்களை காணும் கண்களே பாக்கியமுள்ளவைகள்
புறகண்கள் குருடாயிருந்தாலும் பரவாயில்லை. அகக்கண்கள் குருடாகாதபடிக்கு கவனத்தில் கொள்வோம்.

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஏசாயா11:1.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா9:6.

ADD YOUR COMMENT

Powered By Indic IME