ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்.
I will put enmity Between u and woman,And between ur seed and her Seed;
He shall bruise ur head,u shall bruise His heel. (Genesis 3:15)
Romans 16:20; Ephesians 4:8; Colossians 2:13-15; Hebrews 2:14,15; 1John 3:8; 1John 5:5; Revelation 12:7,8,17; Revelation 20:1-3,10.
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். (ஆதியாகமம் 3:15)
ரோமர் 16:20; எபேசியர் 4:8; கொலோசெயர் 2:13-15; எபிரெயர் 2:14,15; 1யோவான் 3:8; 1யோவான் 5:5; வெளி 12:7; வெளி 20:1-3,10.
இயேசு ஸ்திரீயின் வித்தாக வந்தார்.
இயேசு புருஷனின் வித்தாக வரவில்லை. ஏசாயா 65:9 ல் தேவன் யாக்கோபிலிருந்து ஒரு வித்தை எழும்பப்பண்ணுவார் என்றார்.
இந்த வித்துதான் கன்னியின் வயிற்றில் பிறந்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. ஏசாாய 7:14.
கன்னியின் வயிற்றில் உருவான வித்து லூக்கா1:35 ன் படி பரிசுத்த ஆவியினாலும், உன்னத பலத்தினாலும் உருவானதாகும்.
இந்த வித்தை இவ்வுலகத்திலும் காணப்படாத உலகத்திலும் ஒருவரும் அழிக்க முடியாது. வெளி 12.
இந்த ஸ்திரீயின் வித்தாகிய இயேசு, ஆவியின் வித்தாகிய இயேசு, பரலோக வித்தாகிய இயேசு, அழிவில்லாத வித்தாகிய இயேசு 1யோவான் 3:9 ன் படி ஒருவனுக்குள் தரித்திருந்தால் அவன்…….
தேவனால் பிறந்தவாகின்றான். யோவாான் 1:12.
பாவம் செய்யாதவனாகின்றான். உலகத்தை ஜெயிக்கிறவனாகின்றான். 1யோவான் 5:4.
இதனால் இந்த வித்தே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிபடுத்துகிறது. உங்களில் இருக்கும் வித்தால் சர்ப்பத்தின் தலை நசுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. 1பேதுரு1:22,23.
உங்கள் யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களோடு இருப்பாராக.