நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்
I do not receive testimony from man, but I say these things that you may be saved. (John 5:34)
Jn20:31; Jn12:30; Lk13:34; Lk19:10,41-44; Lk24:47; Act26:29; Ro3:3; Ro10:1,21; Ro12:21; 1Co9:22; 2The2:10; 1Ti2:3-6; 1Ti4:16; 2Ti2:25,26.
நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். (யோவான் 5:34)
யோவான் 20:31; யோவான் 12:30; லூக்கா 13:34; லூக்கா 19:10,41-44; லூக்கா 24:47; அப்போஸ்தலர் 26:29; ரோமர் 3:3; ரோமர் 10:1,21; ரோமர் 12:21; 1கொரிந்தியர் 9:22; 2தெசலோனிக்கேயர் 2:10; 1 தீமோத்தேயு 2:3-6; 1 தீமோத்தேயு 4:16; 2தீமோத்தேயு 2:25,26.
இரட்சிக்கப்பட வேண்டும்:
இரட்சிப்பு என்பது மனித சாட்சியினால் அல்ல, தேவன் கொடுக்கும் சாட்சியினால்தான் உண்டாகும். பிதா இயேசுவை குறித்து கொடுத்த சாட்சியே இயேசுவை இரட்சகராக வெளிப்படுத்தியது. இந்த இயேசுவினாலேதான் இரட்சிப்பு உண்டாகின்றது.
இயேசுகிறிஸ்துவின் வருகையே இரட்சிப்புக்காகதான் என்பதை யோவான் நூலாசிரியர் கூறுகின்றார். யோவான் 3:17; யோவான் 12:47.
இரட்சிப்பு என்பது ஜீவன் பெறுதல் – விடுதலையடைதல் – சுகமடைதல் – தப்புவிக்கப்படுதல் – காப்பாற்றப்படுதல் போன்ற பல பொருள்களில் காணப்படுகின்றது.
இரட்சிப்பு நியாயபிரமாண கிரியையினாலும் உண்டு, கிறிஸ்துவின் கிருபையினாலும் உண்டு. இவையிரண்டும் இயேசுவில் இணைந்து நிற்கின்றது.
இயேசு நியாயபிரமானத்தின் கிரியைகளை நிறைவேற்றி உலக மக்களுக்கு கிருபையின் இரட்சிப்பை கொண்டு வந்தார்.
இந்த கிருபையின் இரட்சிப்பை இயேசுகிறிஸ்து தமது சுய இரத்தத்தினாலே கொண்டு வந்ததினால் இரத்தத்தினால் மீட்பு என்றானது.
இந்த இரத்தத்தினால் உண்டான மீட்பை எவரொருவர் ஏற்றுக்கொண்டு விசுவாசத்திற்குள் வருகின்றாரோ அவர் விசுவாசத்தினால் இரட்சிக்கபட்டவர் என்றாகின்றார்.
இந்த விசுவாசத்தின் இரட்சிப்பு நமக்குள் உண்டாக அவரின் வசனம் பிரசங்கிக்கப்படுகிறது.
அவருடைய சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார்.
இவ்விதம் விசுவாசத்தினால் நமக்கு கிடைத்துள்ள மீட்புக்கு பிதா – குமாரன் – பரிசுத்த ஆவியினாலே செய்துள்ள செயல் ஆச்சரியமானது.
மனித சாட்சியல்ல, பரலோக சாட்சி உண்டாவதினால் தான் பரலோக மீட்பும் சாத்தியமாகும்.
நமது உள்ளத்தின் விருப்பமல்ல, தேவன் நம்மை நடத்துவதினால் தான் இரட்சிப்பை கொண்டுசெல்ல முடியும்.
இரட்சிப்பை உருவாக்கினவர் அவரே. இரட்சிப்பைகொண்டுவந்தவரும் அவரே, இரட்சிப்பவரும் அவரே.
We are the tools of God.
கர்த்தாவே, உமது மகனை குறித்து நீர் கொடுத்த சாட்சியே உலகம் மீட்கபடுவதற்கான உயரிய சாட்சி. அந்த சாட்சியத்தை நாங்களும் பெற்று எங்களை சார்ந்தவர்கள் இரட்சிக்கப்பட நாங்கள் எங்களை ஒப்புகொடுக்கிறோம்.