நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தேன்

நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தேன்.

I did not come to judge the world but to save the world. (John 1247)

John3:17; Matthew1:21; Matthew18:11; Matthew20:28; Luke9:56; Luke19:10; 1Timothy1:15,16; James5:19,20; 2Peter3:15; 1John4:14.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47)

யோவான் 3:17; மத்தேயு 1:21; மத்தேயு 18:11; மத்தேயு 20:28; லூக்கா 9:56; லூக்கா 19:10; 1தீமோத்தேயு 1:15,16; யாக்கோபு 5:19,20; 2பேதுரு 3:15; 1யோவான் 4:14.

இரட்சிக்க வந்தேன்:
ஜீவன் கொடுக்கவும், மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், தப்புவிக்கும்படியாகவும் இயேசு வந்தார். இவ்வசனத்தில் இருவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.

இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையானது மீட்புக்கானதும், பிறரின் நன்மைக்கானதுமாகும். பாவங்களை வெறுத்திருந்தாலும் பாவிகளை நேசித்தார். பாவத்தினாலும், துற்கிரியைகளினாலும் உண்டான ஜீவசேதங்களை செப்பனிட வந்தார். ஜீவனடைய பண்ணுவதும் ஜீவன் கொடுப்பதுமே அவரின் பிரதான நோக்கம். மனதுருகி நற்கிரியைகளை செய்வது அவரின் அன்றாட பணியாகும். அன்புகாட்டுவதும் அன்பு செய்வதும் அவரின் நோக்கம். ஜனங்களை மீட்பதற்கும் பாவத்திற்கு முடிவு உண்டாக்கவும் சாத்தானின் இராஜ்ஜியத்துக்கு நடுக்கம் உண்டாக்கவும் தம் ஜீவனைக் கொடுக்க வந்தார். பிறருக்கு ஜீவன் கொடுக்க தம் ஜீவனைக் கொடுக்க வந்தார். பிறர் நன்மையடைய அவர் தீங்கனுபவித்தார். பிறர் மகிழ்வடைய அவர் கண்ணீர் விட்டார். அவரை அறிவிக்கும் தேவ மனிதர்களில் எத்தனைபேர் பிறருக்காய் ஜீவன் கொடுக்க தன்னை தயார் செய்துள்ளோம்.

2வதாக, இயேசுகிறிஸ்து உலகை இரட்சிக்க வந்திருந்தாலும் கடிந்து கொண்டிருக்கின்றார், கோபப்பட்டிருக்கின்றார். ஐயோ போன்ற கடிதான வார்த்தைகளை கூறியுள்ளார். உங்களுக்கு நியாயத்தீர்ப்பு வரும் என்று இடித்துரைத்தார். மனந்திரும்பவில்லையென்றால் தண்டனை உண்டு என்று உரக்க கூறினார். அன்பு காட்டியிருந்தாலும், மனதுருகியிருந்தாலும் சாட்டையை சுழற்றவும் செய்துள்ளார்.

தம்மை பலியாக கொடுப்பதை பிரதானமான நோக்கமாய் கொண்டிருந்தாலும் தம்மை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தவர்களுக்கு அதிக ஆக்கினை உண்டு என்றார். கர்த்தராகிய இயேசு தீர்ப்பு செய்யாமலிருந்திருக்கலாம், ஆனால் தீர்ப்பு உண்டு என்பதை நினைவு படுத்தியுள்ளார். அன்பார்ந்தவர்களே நமது அன்புக்குரியவர்களின் தவறுகளில் நாம் எப்படி நடந்துக் கொள்ளுகிறோம் என்பதை தேவன் கவனிக்கின்றார். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பு காட்டி, தண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து சீர்படுத்துகிறோமா என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

தேவனுடையவர்கள் ஜாதிசார்பு, இனசார்பு, பணசார்பு, கல்விசார்பு, தோற்றசார்பு படி நடந்துகொள்கிறோமெனில் விவிலியம் உங்கள்மேல் கோபமாயிருக்கின்றது என்பதை மறவாதீர். ஆவியானவர் துக்கப்படுகிறார்.

கிறிஸ்துவைப்போல வாழ தன்னை தயார்படுத்த இயலாதவர் கிறிஸ்தவராயிருக்க தகுதியில்லாதவர் ஆகிறார்.
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு5:7-9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME