நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்

நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்

I have come as a light into the world. (John 12 :46)

John12:35,36; John1:4,5; John3:19; John8:12; John9:5,39; Matthew4:15; Luke 1:76-79; Luke 2:30; Acts 26:18; 1John1:1-3; 1John2:8,9; Psalms 36:9; Isaiah40:5; Malachi4:2.

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:46)

யோவான் 12:35,36; யோவான் 1:4,5; யோவான் 3:19; யோவான் 8:12; யோவான் 9:5,39; மத்தேயு 4:15; லூக்கா 1:76-79; லூக்கா 2:30; அப்போஸ்தலர் 26:18; 1யோவான் 1:1-3; 1யோவான் 2:8,9; சங்கீதம் 36:9; ஏசாயா 40:5; மல்கியா 4:2.

ஒளியாய் வந்தேன்:
தேவனையும், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறவர்கள் பாவ இருளிலும், சாத்தானின் இருளிலும், மரண இருளிலும் அகப்படாதபடிக்கு கர்த்தராகிய இயேசு ஒளியாக வந்தார். கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும்போதுதான் ஒளியை பெற முடியும். ஒளியை அடைந்தால்தான் இடறாமலிருக்க முடியும். இடறாமலிருந்தல்தான் முன்னேறி செல்ல முடியும். முன்னேறி செல்லும்போதுதான் கர்த்தருடைய மகிமை காணப்படும்.
இயேசுவை விசுவாசித்து அவரை தங்கள் ஆத்தும மீட்பராகவும், பாவ நாசராகவும் ஏற்றுக்கொண்டவர்கள் உலக இருளுக்குள் இருந்தாலும் வெளிச்சத்தின் பிள்ளைகளாகவும், வெளிச்சமாகவும் காணப்படுவர். பாவமோ, சாபமோ, சாத்தானின் கிரியைகளோ, மரணமோ, வியாதியோ, வறுமையோ, இழப்புகளோ அவர்களின் நம்பிக்கையை மேற்கொள்ளாது. விசுவாசிக்கிறவர்களாகிய இவர்கள் ஒளியின் ஆயுதங்களை தரித்து இவைகளை மேற்கொள்ளுகிறவர்களாயிருப்பர்.

இயேசுவாகிய ஒளியை அரசியல் தலைவர்களினாலும், சமய தலைவர்களினாலும், வன்முறை வெறியாட்டங்களினாலும், எவ்விதமான சட்டங்களினாலும், இராணுவ படைபலங்களினாலும் அகற்றவும் முடியாது, மெற்கொள்ளவும் முடியாது.

நம்பிக்கையிழந்தவர்கள், ஒளியும் விழியும் இழந்தவர்கள், வழிதவற விட்டவர்கள், தடம் புரண்டவர்கள், பாவ வலையில் விழுந்தவர்கள், உடைந்து போனவர்கள், உடைக்கப்பட்டவர்கள் இயேசுவாகிய ஒளியினால் ஒளியேற்றப்படும்படியாகவே ஒளியாக வந்தார். அவர் மங்கி எரியும் திரியை அணைக்காமலும், நெரிந்த நாணலை முறியாமலும் இருக்கிறவர்.

மரணபயத்தினால் சூழப்பட்டவர்களும், காரிருளில் அடைக்கப்பட்டவர்களும் ஒளிபெற்று ஒளியாகும்படி வந்தார். இயேசுகிறிஸ்துவின் பிறப்பு நீதியின் சூரியனின் உதித்தலாகும். காலை அருணோதயமாய் உன்னில் உதிக்க விரும்புகின்றார். கிறிஸ்து உன்னில் பிறப்பதுவே நீ ஒளியாகும் மாற்றம். புதுபிறப்பாய் மாறுவதே ஒளியின் தோற்றம்.

ஒளியாய் வந்தவரை ஒளியாய் கொள்ளுங்கள், ஒளியாக மாறுங்கள். ஒளியை ஏற்றுங்கள். ஒளியிலே வாழுங்கள்.

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1யோவான் 1:5-7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME