இயேசு சத்தமிட்டு என்னை விசுவாசிக்கிறவன் என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
Then Jesus cried out and said,He who believes in Me,believes not in Me but in Him who sent Me. (John 12:44)
John 13:20; Matthew 10:40; Mark 9:37; 1Peter 1:21; John 14:13,24; John 7:28,37; John 11:43; Proverb 1:20; Proverb 8:1; Isaiah 55:1-3.
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். (யோவான் 12:44)
யோவான் 13:20; மத்தேயு 10:40; மாற்கு 9:37; 1பேதுரு 1:21; யோவான் 14:13,24; யோவான் 7:28,37; யோவான் 11:43; நீதிமொழிகள் 1:20; நீதிமொழிகள் 8:1; ஏசாயா 55:1-3.
இயேசு சத்தமிட்டார். கர்த்தராகிய இயேசு சத்தமிட்டு கூப்பிட்டதையோ, சொன்னதையோ சுவிசேஷ புத்தகங்கள் பதிவு செய்துள்ளன.
இயேசு சத்தமிட்டு கூப்பிட்டார். மத்தேயு 27:46,50.
இயேசு சத்தமிட்டு சொன்னார். யோவான் 7:37,38.
இயேசுவின் சத்தத்தை கேட்கிறவன் சத்தியவான் என்று கூறுகின்றார் இயேசு. யோவான் 18:37.
ஆடுகள் அவரின் சத்தத்துக்கு செவிகொடுக்கும். யோவான் 10:3.
மரித்தோர் அவரின் சத்தம் கேட்கும் காலம் வரும். யோவான் 5:25.
மணவாளனின் தோழன் அவரின் சத்தத்தை அறிகின்றான். யோவாான் 3:29.
கர்த்தராகிய இயேசுவினிமித்தம் உண்டான சத்தம். மத்தேயு 3:17;மத்தேயு 17:5; மத்தேயு 25:6; லூக்கா 9:36; யோவான் 12:28-30.
கர்த்தராகிய இயேசுவின் சத்தம் தெருக்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும் கேட்கும் என்று தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றது. சங்கீதம் 1:20-22; ஏசாயா 55:1-3; வெளி 22:17.
இன்றும் அவரின் சத்தம் பரிசுத்தவான்கள் மூலமாக தொனித்துக்கொண்டேயிருக்கின்றது. அவருடைய சத்தத்தை காதுள்ளவன் மட்டுமே கேட்க முடியும். மத்தேயு 11:15; மத்தேயு 13:9; வெளி 2:7. புதிய ஏற்பாட்டின் துவக்கத்திலிருந்து இறுதி வரையிலும் அவரின் சத்தம் தொனித்துக்கொண்டிருக்கின்றது என்று பதியப்பட்டுள்ளது. விவிலியத்தில் பதியப்பட்டது நமது உள்ளங்களிலும் பதியுமானால் நாமும் அவரின் சத்தம் கேட்க முடியும்.
பொய்யான, மாய்மாலமான, நோய்கொண்ட சத்தங்களின் இரைச்சல்கள் அதிகரித்துக் காணப்படுவதால் கர்த்தராகிய இயேசுவின் சத்தம் கேட்ககூடாதபடிக்கு தடுக்கப்படுகின்றது. களியாட்டுகளின் இரைச்சலகளிலும், பாப் றாக் இசைகளின் இரைச்சல்களிலும் வார்த்தைகள் கேட்ககூடாதபடிக்கு இசைகளின் எழுச்சி காணப்படுவதுபோல அவரின் சத்தமும் கேட்கக்கூடாதபடிக்கு தடுக்கப்படுகிறது. அவரின் சத்தம் பெரும் தொனியாய் கேட்கும் காலம் வரப்போகிறது. இது மனந்திரும்புதலுக்கான சத்தமாயிராது. கோபாக்கினைக்கான சத்தமாகவே காணப்படும். பெருந்தொனி கேட்கப்படுமுன் இரைச்சல்களினூடே அவரின் சத்தம் கேட்டு அவரை பின்தொடர்வோமெனில் வரப்போகிற ஆக்கினைக்கு தப்புவோம்.
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். வெளி 1:10-13.