தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கின்றது

தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கின்றது.

This He said, signifying by what death He would die. (John 12:33)

Jn3:14; Jn8:21,28; Jn12:24; Jn18:32; Jn21:19; Mk9:9,10; Lk23:33.

தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். (யோவான் 12:33)

யோவான் 3:14; யோவான் 8:21,28; யோவான் 12:24; யோவான் 18:32; யோவான் 21:19; மாற்கு 9:9,10; லூக்கா 23:33.

இயேசுவின் மரணம்:
மனிதனாக பிறந்தவர் எவரும் மரண வாசலுக்குள் நுழையாமல் தப்பமுடியாது. பாவம் செய்தவரானாலும் சரி, பாவம் செய்யாதவராயிருந்தாலும் சரி யாவரும் மரண வழியிலேயே பயணிக்கின்றோம்.

தேவகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனாக வெளிபட்டதினால் ஆவியால் பிறந்திருந்தும், பாவம் அறியாதவராயிருந்தும், பாவம் செய்யாதவராயிருந்தும் மரணத்தின் பாதையில் பயணித்து முடிவில் மரண வாசலுக்குள் நுழைந்தார்.

தெய்வமகன் இயேசுவே மரணத்தை அனுபவித்திருக்கின்றாரென்றால் எந்த ரிஷியானாலும், முனிவரானாலும், யோகியானாலும் மரணத்தின் வழியில் பயணித்து முடிவில் மரணக்குழியில் விழுந்துதானாக வேண்டும். இவர்களின் மரணத்தை முக்தி என்றோ, நிஷ்டை என்றோ கூறி இவ்வுலகை ஏமாற்றலாம். அனைத்தையும் படைத்து ஆண்டுவரும் கர்த்தாவை ஏமாற்ற முடியாது. திரும்பிவரவியலாத குழியில் தள்ளப்பட்டார்கள்.
கர்த்தராகிய இயேசு மட்டுமே மரண குழியிலிருந்து பிதாவினால் ஏறிவரப்பண்னப்பட்டவராயிருக்கின்றார்.

இயேசு மரணித்தார். இது பாவத்தினால் உண்டான மரணம் அல்ல, பாவத்தில் அகப்பட்டோரை மீட்க சென்ற இடத்தில் உண்டான காயம், இழப்பு, அவலம். இந்த மரணத்துக்கு முடிவு உண்டு. எனவே மரணித்த இயேசு ஜீவிக்கிற இயேசுவாக பரிணமிக்கின்றார்.

இயேசுவைப்போல பாவத்தில் அகப்பட்டோரை மீட்க சென்று அங்கே இழப்பையும், காயத்தையும், அவலத்தையும் அடைந்தாலும் இவர்களின் மரணத்துக்கு முடிவுரை எழுதப்படும். மரணித்த இவர்கள் ஜீவனுக்குள் பிரவேசித்து ஜீவிக்கிறவர்களாய் வெளிப்படுவார்கள்.

இயேசுவின் பின்னடியார்களின் மரணம் இவ்வுலகபடி வேதனையாகவும், இழப்பாகவும் காணப்பட்டாலும் அவ்வுலக ஒழுங்குபடி ஜீவனும், மகிழ்ச்சியும், சமாதானமுமாகும்.
அவர் சிலுவையில் மரிப்பது தந்தையின் விருப்பம். இது மனிதபாவத்தின் கொடுமையான உச்சத்தை வெளிப்படுத்தும் படியாகவும், மனித மீட்பு மிகுந்த வலிகளினூடே கொண்டுவரப்பட்டதாகவும் மனுக்குலம் அறிவதற்காகவும் இந்த சிலுவை தெரிந்துக் கொள்ளப்பட்டது. சிலுவையை வெறுக்க முடியாது, சிலுவையில் என்னை வெறுக்காமல் இருக்கவும் முடியாது.

அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். ரோமர் 6:5-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME