வானத்திலிருந்து உண்டான சத்தம், இடிமுழக்கம், தேவதூதன் பேசியதாயிருக்குமோ

வானத்திலிருந்து உண்டான சத்தம், இடிமுழக்கம், தேவதூதன் பேசியதாயிருக்குமோ?

people who stood by and heard it said that it had thundered.Others said,An angel has spoken to Him. (John 12:29)

Ex19:16-24; Ex20:18-24; Job37:2-5; Job40:9; Ps18:13; Ps29:3; Ps68:33; Eze10:5; Act23:8,9; 2Pet1:17,18; Rev6:1; Rev8:5; Rev11:19; Rev14:2; Rev18:1,2.

அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். (யோவான் 12:29)

யாத்திராகமம் 19:16-24; யாத்திராகமம் 20:18-24; யோபு37:2-5; யோபு 40:9; சங்கீதம் 18:13; சங்கீதம் 29:3; சங்கீதம் 68:33; எசேக்கியேல் 10:5; அப்போஸ்தலர் 23:8,9; 2பேதுரு 1:17,18; வெளி 6:1; வெளி 8:5; வெளி 11:19; வெளி 14:2; வெளி 18:1,2.

வானத்திலிருந்து உண்டான சத்தம்.
28 ஆம் வசனத்தில் மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று என்று தரப்பட்டுள்ளது. இது இயேசுகிறிஸ்துவின் ஜெபத்துக்கு பிதாவிடமிருந்து கிடைத்த பதிலாகவே கருதப்படுகிறது.

இந்த வான சத்தம் கேட்கையில், அங்கே கூடியிருந்த ஜனங்கள் இருவித அபிப்பிராயம் கொண்டனர் என்று 29 ஆம் வசனம் கூறுகின்றது. ஒருசாரார் இது இடிமுழக்கம் என்றனர், இன்னொரு சாராரோ இது தேவதூதர் கிறிஸ்துவோடு பேசினது என்றார்கள். இயேசுவோடு பேசப்பட்ட வார்த்தைகளை அவர்கள் கேட்காததுவே இந்த தப்பபிப்பிராயம் உண்டாக காரணமாய் அமைந்தது.

கர்த்தருடைய சத்தம் தொனித்துக் கொண்டேயிருக்கிறது. மனிதர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அவருடைய சத்தம் இவ்வுலகில் எப்பொழுதும், எங்கும் தொனித்துக் கொண்டேயிருக்கிறது. அவர் பேசுகிறார். அவரது பாஷையை புரிந்துகொள்கிறவனே அவரது பேச்சை விளங்கிக்கொள்ள முடியும். அவரது வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டுள்ளதினால் பரிசுத்த ஆவியினாலன்றி அவரது வார்த்தைகளை விளங்கிக்கொள்ள இயலாது.

துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், இழப்புகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அவருடைய சத்தத்தை கேட்டு ஆறுதலடைவதற்கு பதிலாக அவ்வித வேதனைகளிலே மூழ்கி காணப்படுகின்றனர்.

பாவங்கள், அக்கிரமங்கள், பொல்லாப்புகள், தீமைகளினால் பிடிபட்டவர்கள் அவருடைய வார்த்தைகளை கேட்டு மனந்திரும்புவதற்கு பதில் அவைகளிலே தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

மாம்ச சுபாவங்கள், பிசாசின் சுபாவங்கள், உலக சுபாவங்கள் யாவும் அவருடைய சத்தத்தை அறிந்துக்கொள்வதற்கு பெரும் தடைகளாய் இருக்கின்றன.

தேவனுடைய ஆவியினாலேயன்றி தேவனையும், குமாரனையும், பரிசுத்த ஆவியையும், வரங்களையும், கர்த்தருடைய வாக்குகளையும், கர்த்தருடைய சபையையும், இறுதிகாலங்களையும், நிகழ்கால மாற்றங்களையும் விளங்கிக்கொள்ள இயலாது.

பாவத்துக்குரியவர்கள் பாவத்தையும், உலகத்துக்குரியவர்கள் உலகத்தையும், மாம்சத்துக்குரியவர்கள் மாம்சத்தையும், பிசாசுக்குரியவர்கள் பிசாசையும், அறிவுக்குரியவர்கள் அறிவையும், மரணத்துக்குரியவர்கள் மரணத்தையும் சிந்திக்கிறார்கள்.

ஜீவனுக்குரியவர்களோ தங்கள் ஜீவன் நரகிற்கு போகாதிருக்கும்படியாக நித்திய ஜீவனுக்குரியவைகளை சிந்திக்கிறார்கள்.

மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1கொரிந்தியர்2:11-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME