ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்.
If anyone serves Me, let him follow Me. (John 12:26)
Jn13:16; Jn14:15; Jn15:20; Lk6:46; Ro1:1; Ro14:18; 2Cor4:5; Gal1:10; Col3:24; Col4:12; 2Pet1:1; 1Jn5:3; Jud1:1.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26)
யோவான் 13:16; யோவான் 14:15; யோவான் 15:20; லூக்கா 6:46; ரோமர் 1:1; ரோமர் 14:18; 2கொரிந்தியர் 4:5; கலாத்தியர் 1:10; கொலோசெயர் 3:24; கொலோசெயர் 4:12; 2பேதுரு 1:1; 1யோவான் 5:3; யூதா1:1.
என்னை பின்பற்று:
இயேசுகிறிஸ்துவுக்கு பணி செய்கிறவன் இயேசுவை மட்டுமே பின்பற்றுவான். இயேசுவிடம் அன்பாயிருப்பவன் மட்டுமே இயேசுவின் கற்பனைகளை கைக்கொண்டு இயேசுவை பின்பற்றுவான். இயேசுவை பின்பற்றுகிற ஊழியகாரன் இயேசுவை விடவும் பெரியவனல்ல. இயேசுவின் வார்த்தைகளையும், அவரையும் பின்பற்றுகிறவன் மட்டுமே இயேசுவுக்கு ஊழியம் செய்கிறவன். இயேசுவை பின்பற்றுகிற ஊழியக்காரன் தன்னையும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் குறித்து பேசாமல் இயேசுவை குறித்து மட்டுமே பேசுவான்.
ஊழியம் என்ற சொல் ஒரு வேலைக்காரனைப்போல பணி செய்வதைக் குறிக்கின்றது. மற்றவர்களின் நன்மைக்காய் பணி செய்கிறவனே ஊழியம் செய்கிறவன். பு.ஏ ல் இச்சொல் 38 தடவைகள் வருகின்றது. ஊழியக்காரன் இயேசுவின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் செய்து முடித்து அவரின் இராஜ்யத்துக்கு நன்மை வரச் செய்கிறவனே. கிறிஸ்துவுக்குள் மீட்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் ஆவியின் நிறைவை பெற்று, கிறிஸ்துவுக்குள் தேவனால் அழைப்பு பெற்று, கிறிஸ்துவுக்குள் ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து பணி செய்து, கிறிஸ்துவுக்குள் நிறைவு பெறுகிறவனே உண்மை ஊழியக்காரன்.
பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் ஊழியக்காரர்களாய் அழைக்கப்படுகிறார்களெனில் அவர்கள் தேவனின் ஊழியக்காரர்கள், இஸ்ராயேல் தேசத்துக்காய் பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களல்ல. நாமோ தேவனால் அழைக்கப்பட்டு பரலோக இராஜ்ஜியத்துக்காய் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்கள்.
என்னை பின்பற்றக்கடவன் என்பது முற்றிலுமாய் கிறிஸ்துவையே பின்பற்ற வேண்டும் என்பதாகும். பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை சிலவற்றிற்கு திருஷ்டாந்தங்களாக பயன்படுத்தலாமேயன்றி மற்றபடி இயேசுவையே பின்பற்ற வேண்டும். நாம் இயேசுவையே போதிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவின் கிரியைகளை பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவின் உபதேசங்களை உபதேசிக்க வேண்டும். அவரை மட்டுமே மாதிரியாக கொள்ள வேண்டும். இயேசுவின் ஊழியக்காரராய் இருந்து நியாயபிரமாணத்தை போதிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவாய் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை குறித்து பேசுவதும் கடினம். அவர்கள் நியாயபிரமாணத்தின் மக்கள்.
நாமோ கிருபையின் – ஆவியின் பிரமாண மக்கள். பவுல், நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறதுபோல நீங்களும் கிறிஸ்துவையும் என்னையும் பின்பற்றுங்கள் என்கிறார். நியாயபிரமணத்தை பின்பற்றிய பவுலே இவ்வாறு கூறும்போது நாம் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்?
நாம் கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் பங்கடைய அவருக்கு பணி செய்கிறவர்களாகவும், அவரை பின்பற்றுகிறவர்களாகவும் காணப்படுவோம்.
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:14.