பரிசேயர் இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று போயிற்றே

பரிசேயர் இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று போயிற்றே.

Pharisees said,You see that you are accomplishing nothing. Look, the world has gone after Him. (John 12:19)

Jn3:26; Jn17:21; Act17:6; 1Jn2:2,7; Rev13:3,4; Ps22:27; Ps49:1,2; Isa27:6.

அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள். (யோவான் 12:19)

யோவான் 3:26; யோவான் 17:21; அப்போஸ்தலர் 17:6; 1யோவான் 2:2,7; வெளி13:3,4; சங்கீதம் 22:27; சங்கீதம் 49:1,2; ஏசாயா 27:6.

உலகம் அவரை பின்பற்றும் காலம்.
பெத்தானியாவிலிருந்து வந்த கூட்டமும், எருசலேமிலிருந்து வந்த கூட்டமும் ஒருங்கிணைந்து இயேசுவை புகழ்வதையும், அவர்கள் லாசருவினிமித்தம் இயேசுவைக் குறித்து பிறருக்கு சாட்சி பகருவதையும் குறித்து பரிசேயர் மிகுந்த மன உளைச்சல் கொண்டனர். இயேசுவை பின்பற்றும் ஜனங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதினால் தங்களுடைய மரியாதையும், அதிகாரமும் பறிக்கப்பட்டு விடுமோ என்று நினைத்தவர்களாய் அவருக்கு எதிராக ஆலோசனை செய்தார்கள். அந்த ஆலோசனையில் வெளிப்பட்ட கருத்துதான் உலகமே இயேசுவுக்கு பின்சென்று போயிற்று என்பதாகும்.

முழு உலகமும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என்பது பிதாவின் விருப்பம். இயேசு உலகத்தின் பாவத்தை நீக்கி உலகை இரட்சிப்பதினால் முழு உலகமும் அவரை பின்பற்றி தானாக வேண்டும். இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான்1:29. அவரையன்றி இவ்வுலகில் பின்பற்றுவதற்கு வேறு ஒரு நாமமும் கட்டளையிடப்படவுமில்லை. அப்போோஸ்தலர் 4:12. சாத்தானுக்குள், இருளுக்குள், பாவத்துக்குள் விழுந்து கிடக்கும் இவ்வுலகம் முழுவதுமாகவே மீட்கப்பட வேண்டும். அதற்காகவே இயேசு தமது இரத்தத்தை சிந்தி ஜீவனைக் கொடுத்தார்.

அரசுகளும், இனங்களும், மதங்களும், மனிதர்களும் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ நிச்சயமாக ஒருநாள் அவரை பின்பற்றி அவருக்கு எதிர்கொண்டு செல்லும் நாட்கள் வரும். வெளி 7:9. எந்த ஆதிக்க சக்திகளாலும், ஆற்றல்களினாலும், படைப்பலங்களினாலும் அவரை பின்பற்றுகிற வெகு ஜன கூட்டத்தை தடுக்கவும் இயலாது, கட்டுப்படுத்தவும் இயலாது. உலகின் ஒருமுனை துவங்கி மறுமுனை மட்டும் அவருடைய நாமமே சந்தான பரம்பரையாய் கோலோச்சி நிற்கும். இருளினால் வெளிச்சத்தை எவ்விதம் தடுக்க இயலாதோ, தீமையினால் எவ்விதம் நன்மையை மேற்கொள்ள இயலாதோ அவ்விதமே அவருடைய புகழ் எட்டுதிக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. சங்கீதம் 113:3,4.

ADD YOUR COMMENT

Powered By Indic IME