சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.(ஏசாயா 51:3)

எரேமியா 33:11; சங்கீதம் 100:2; ஏசாயா 35:2; 1 பேதுரு 1:8,9; வெளி19:1-7; 2தெசலோனிக்கேயர் 2:16,17.

மீட்கப்பட்ட எங்கள் வாழ்வில் வரக்கூடிய….

குறைவில் உம் நிறைவை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

குழப்பத்தில் உம் தெளிவை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

வியாதியில் உம் சுகத்தை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

பலவீனத்தில் உம் பலத்தை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

போராட்டத்தில் உம் ஆறுதலை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

சாபத்தில் உம் ஆசீர்வாதத்தை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

வீழ்ச்சியில் உம் எழுச்சியை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

நஷ்டத்தில் உம் இலாபத்தை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

இழப்பில் உம் ஆதாயத்தை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

கலக்கத்தில் உம் சமாதானத்தை கொண்டுவருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். ..

ADD YOUR COMMENT

Powered By Indic IME