அன்பாயிருந்து

பிதா குமாரனிடத்தில் அன்பாயிருந்து தாம் செய்கிறவைகளை காண்பிக்கிறார்.

Father loves the Son, and shows Him all things that He Himself does. (John 5:20)
Jn3:35; Jn10:32; Jn15:15; Jn17:25,26; Mt3:17; Mt11:27; Mt17:5; Lk10:22; 2Pet1:17; Pr8:22-31; Isa49:5.

பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து,தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்: நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். (யோவான் 5:20)

யோவான் 3:35; யோவான் 10:32; யோவான் 15:15; யோவான் 17:25,26; மத்தேயு 3:17; மத்தேயு 11:27; மத்தேயு 17:5; லூக்கா 10:22; 2 பேதுரு 1:17; நீதிமொழிகள் 8:22-31; ஏசாயா 49:5.

பிதாவின் அன்பு:

பிதா குமாரனிடத்தில் அன்பாயிருந்தார். இதனை செல்லபிள்ளை, நேசகுமாரன், பிரியமாயிருக்கிறேன் போன்ற சொற்களால் விவிலியம் விவரிக்கின்றது.

இதில் 3 விஷயங்கள் காணப்படுகின்றது.

1. அன்பு பிதாவிலிருந்து வருகிறது. அன்பே தேவன் அல்ல. தேவன் அன்பாகயிருக்கிறார். அன்பு தேவனிடத்தில் உள்ளது. அது அவரில் இருக்கிறது. அன்பின் ஊற்று தேவனே. அன்பின் மூலம் அவரே. இந்த அன்பை தமது குமாரனிடத்தில் வெளிப்படுத்தினார். தேவனிடமிருந்து வெளிப்படும் அன்பில் தெய்வீக அன்பு உண்டு, குடும்ப அன்பு உண்டு, சிநேகத்தின் அன்பு உண்டு, தியாக அன்பு உண்டு. ஆனால் அவரில் இச்சை சார்ந்த அன்பு, காதல் அன்பு இல்லை. அவைகள் சாத்தானிடமிருந்து வருகின்றது. அன்பை கொடுப்பவரும் அவரே. இருதயங்களில் ஊற்றுகிறவரும் அவரே.

2. குமாரன் செய்யப்போகும் காரியங்களினிமித்தம் அன்பு அவரில் பெருக்கெடுக்கிறது. பாவத்தினிமித்தம் உருக்குலைந்துபோன மனித சமுதாயத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கும்படியாக தன் ஜீவனை கொடுக்கும் இரட்சண்ய கிரியையை இயேசுகிறிஸ்து செய்ய போகிறதினால் பிதா தமது குமாரனிடத்தில் அன்பாயிருந்தார். அன்பு பிறரை செயல்படுத்தவைக்கும் கிரியா ஊக்கி. சட்டத்தினால் செய்யமுடியாத சில கடின விஷயங்களை அன்பினால் செய்யவைக்கமுடியும். பிதாவின் அன்பு குமாரனை மரணம் வரையிலும் செயல்பட வைத்தது.

3. இந்த அன்பு சபையில் நிரம்பி காணப்படுகிறது. சபை என்பது கிறிஸ்துவின் சரீரமாகயிருப்பதினால் பிதா வெளிப்படுத்திய அன்பு இன்றும் சபையில் நிறைவாய் காணப்படுகிறது. இந்த அன்பு சபையில் இருக்குமானால் சபை உபத்திரவங்களை சந்தோஷமாய் சகிக்கும், சபை அழிந்துபோகும் ஆத்துமாக்களை தேடிச்செல்லும், சபையின் தலைமைகள், சபையின் பெரியவர்கள் விசுவாசத்தில் பலவீனர்களையும், எதிரிடையாக செயல்படுகிறவர்களையும் அன்பினால் அணைத்துகொள்ளும். பிதா – குமாரன் – ஆவியின் விருப்பத்திற்கு மாறாக எதையும் சபை செய்யாது தனித்துவமிக்கதாய் நிற்கும்.

தேவன் அன்பாகவேயிருக்கிறார்.
தேவன் அன்பை உன்னில் ஊற்றியுள்ளார்.
நீ அவரின் அன்பை சுமந்து செல்லும் பாத்திரம்.
அன்பை கொண்டிருக்கிறாயா?
அன்பை பரிமாறுகிறாயா?
அல்லது அன்பை அடக்கி வைக்கிறாயா?

கர்த்தாவே, நீர் உமது குமாரனில் அன்பாயிருந்ததினால் நாங்கள் மீட்கப்பட்டோம். உமது பிள்ளைகளானோம். நாங்கள் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாது அன்பு செலுத்தி வாழ உதவி செய்யும். உமது அன்பை சுமந்து செல்லும் நல்ல பாத்திரங்களாக நாங்கள் இருக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME