பிதா செய்வதையே குமாரனும் செய்கிறார்.
He sees the Father do;for whatever He does,Son also does in like manner. (John 5:19)
Lk21:15; Ro8:11; 2Co4:14; 2Co12:9,10; Eph3:16; Phi3:21; Phi4:13; 1Th4:14; Ex4:11; Ps27:14; Ps138:3; Pr2:6; Isa45:24; Jer17:10.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்: அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். (யோவான் 5:19)
லூக்கா 21:15; ரோமர் 8:11; 2கொரிந்தியர் 4:14; 2 கொரிந்தியர் 12:9,10; எபேசியர் 3:16; பிலிப்பியர் 3:21; பிலிப்பியர் 4:13; 1 தெசலோனிக்கேயர் 4:14; யாத்திராகமம் 4:11; சங்கீதம் 27:14; சங்கீதம் 138:3; நீதிமொழிகள் 2:6; ஏசாயா 45:24; எரேமியா 17:10.
பிதா செய்வதை குமாரன் செய்கிறார். ஏன்?
1. இது தேவனின் திட்டம். ஆதாம் இதனை நிறைவேற்றவில்லை. இஸ்ராயேலரும் தேவ விருப்பம் நிறைவேற்றவில்லை. எனவே இயேசு தேவ திட்டத்தின் பூரணராக வந்தார்.
2. தேவன் செய்வதை குமாரன் காண்பதினால் குமாரன் வேறு எதுவும் செய்வதில்லை.
3. பிதாவுக்கும், குமாரனுக்கும் நெருங்கிய உறவு இருந்தமையினால் இவ்விதம் நடந்துகொண்டார்.
4. தன் பின்னடியார்கள் இவ்விதம் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான முகாந்தரம்.
இந்த வசனத்தில் இயேசுகிறிஸ்து செய்யும் செயலை 3 விதங்களில் விளக்க இடமுண்டு.
1. காண்கிறதை செய்கிறார். காணுதல் என்பதற்கான மூலச்சொல் ‘விளிப்போ’. சரீர கண்களால் பார்த்தல், மனக்கண்களால் பார்த்தல், பார்க்கக்கூடிய ஒன்றை உற்று பார்த்தல் எனப்பொருள் உண்டு. பிதா காண்பிக்கிறார் மற்றும் பிதாவின் செயலை காணும் கண்கள் ஆகிய இருவிதங்களில் இயேசு பார்க்கின்றார். நம்மை இரட்சித்த இயேசு நமக்கு காண்பிப்பதை நாம் செய்கின்றவர்களாகவோ, அல்லது அவர் செய்வதை பார்க்ககூடிய கண்கள் உடையவர்களாகவோ நாம் இருக்க வேண்டும்.
2. தாமாக எதையும் செய்யார். அனுப்பப்படுகிறவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஜயம் இதுவாகும். இயேசு தன்னிஷ்டபடி எதையும் செய்ய அனுப்பப்படவில்லை. இயேசுவும் பிதாசெய்யாததை தாம் செய்யும்படி விரும்பவும் இல்லை. நாமும் அவர் செய்யாததை செய்யாது அவர் வழி நடப்பதே சரியானது. நாமாக ஒன்றை செய்ய நாம் நம்முடையவர்களல்ல, நாம் அவரால் உண்டாக்கப்பட்டவர்கள். அவருக்காய் உண்டாக்கப்பட்டவர்கள்.
3. பிதா செய்வதை செய்கிறார். பிதா என்னச் செய்கிறாரோ அதையே குமாரனும் செய்ய பணிக்கப்பட்டுள்ளார். பிதா செய்வதை குமாரன் செய்ய இயலுமா?இயலும். அது தேவனின் விருப்பம். செய்வதை அப்படியே செய்வதினால் பிதா மகிமைப்படுகிறார். மாற்றி செய்வதற்கோ, திரித்து செய்வதற்கோ இடமில்லை. விவிலியத்தில் தேவனுடைய வார்த்தைகளும், கிரியைகளும் மனிதர்களால் – பின்பற்றுகிறவர்களால் மாற்றப்படலாகாது என்றே அறுதியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு காலங்களுக்கேற்ப வார்த்தைகளும், கிரியைகளும் மாற்றத்துக்குட்பட்டாகவேண்டும் என்ற சித்தாந்தமே தேவ அமைப்பை சிதைக்கிறதாயுள்ளது. கிறிஸ்தவ குடும்பத்தின் தலைமையும், சபையின் தலைமையும் கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றது. தலைமை கிறிஸ்துவைபோல நடந்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களும், சபை உறுப்புகளும் தலைமையை பின்பற்றுகிறவர்களாகவே இருக்க வேண்டும். ஆதிகாலந்தொட்டு பின்பற்றப்பட்டு வருகிற இந்த அமைப்பு முறையை மாற்றுவது தேவதிட்டத்தை குலைப்பதாகும். இதே வழியை முன்னெடுப்பதே ஆசீர்வாதம் பெற வழி.
கர்த்தாவே, உம்மை பின்பற்ற உம் குமாரனையும், உம் குமாரனை பின்பற்ற ஊழியர்களையும், ஊழியர்களை பின்பற்ற விசுவாசிகளையும், விசுவாசிகளை பின்பற்ற உலகத்தையும் பணித்துள்ளீர். இந்த முறைமையிலே நாங்கள் முன் செல்ல விரும்புகின்றோம். எங்களுக்கு ஞானம், பெலன், கிருபை ஆகிய யாவும் தந்து உம் குமாரனைபோல செயல்பட எங்களுக்கு உதவிடும்.