காய்பா தீர்க்கதரிசனமாகச் சொன்னான்

காய்பா தீர்க்கதரிசனமாகச் சொன்னான்.

being high priest that year he prophesied that Jesus would die for the nation, (John 11:51,52)

Isa11:10-12; Mt25:31-34; Col1:19,20; Ro8:29,30; Eze11:16,17; Eze34:12; Eph2:14-17; Jas1:1; 1Pet1:1.

இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், (யோவான் 11:51)

அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். (யோவான் 11:52)

ஏசாயா 11:10-12; மத்தேயு 25:31-34; கொலோசெயர் 1:19,20; ரோமர் 8:29,30; எசேக்கியேல் 11:16,17; எசேக்கியேல் 34:12; எபேசியர் 2:14-17; யாக்கோபு 1:1; 1பேதுரு 1:1

தீர்க்கதரிசனம்:
இரச்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய ஆவியால் நிரம்பியவர்கள், தேவனால் வழிநடத்தப்படுகிறார்கள். தீர்க்கதரிசனங்கள் உரைப்பதை விவிலியத்தில் நாம் அறிவோம். ஆனால் பிலேயாம் போன்று இந்த காய்பாவும் தீர்க்கதரிசனமாக உரைத்தார்கள் என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாகவே உள்ளது. காய்பா கூறியதின் பொருளை தேவன் தமது ஆவியினால் யோவான் அப்போஸ்தலன் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். காய்பா மூலமாய் தேவன் வெளிப்படுத்தியதை காய்பா புரிந்து கொள்ளவும் இல்லை.

விசுவாசிக்கவும் இல்லை. பிலேயாம் சாபத்தை ஆசிர்வாதமாக மாற்றியதுபோல் காய்பாவின் மனக்குரோதத்தை தேவன் இஸ்ராயேலரின் – உலகத்தின் மீட்பாக முடியப்பண்ணினார்.
இயேசுவின் மரணம் யூதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் , யூதர்களின் மீட்புக்கும் , புறஜாதியாரிடையில் சிதறடிக்கப்பட்ட இஸ்ராயேலரை மீட்டு ஓரிடத்தில் சேர்ப்பதற்கும் பயன்பட்டது.

இக்காலத்திலும் தேவனுடைய மனிதர்கள் வாயிலிருந்து வெளிப்படும் குரோதமான வார்த்தைகளையும் , தேவனுடையவர்களல்லாதவர்கள் வாயிலிருந்து வெளிப்படும் குரோதமான வார்த்தகளையும் மாறுதலுக்குட்படுத்தி நன்மையாகவும், ஆசீர்வாதமாகவும் முடியப்பண்ணும் தீர்க்கதரிசன வார்த்தைகளாகவும் மாற்றுவார். நாம் நமது வார்த்தைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருப்போம். அவைகளைக்குறித்து நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (மத்தேயு 12:34-37). கவனமாக செயல்படுவோம் தேவன் கவனிக்கிறார்.

அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. கொலோசெயர் 4:6

ADD YOUR COMMENT

Powered By Indic IME