யூதர்களில் அனேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்
Then many of the Jews who had come to Mary, and had seen the things Jesus did, believed in Him. (John 11:43-45)
1Kin17:21,22; 2Kin4:33-36; 1Sam2:6; Ps33:9; Eze37:3-10; Hos13:14; Act20:9-12; Phi3:21; Rev1:18.
அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு சொய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (யோவான் 11:45)
1இராஜாக்கள் 17:21,22; 2இராஜாக்கள் 4:33-36; 1சாமுவேல் 2:6; சங்கீதம் 33:9; எசேக்கியேல் 37:3-10; ஓசியா 13:14; அப்போஸ்தலர் 20:9-12; பிலிப்பியர் 3:21; வெளி 1:18.
அவர் சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும்.
இந்த 3 வசனங்களிலும் 3 நிகழ்வுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
இயேசு லாசருவுக்கு கட்டளையிட்டார். மரித்து நாலு நாளான லாசருவுக்கு இயேசுவின் சத்தம் கேட்கும் கேள்விதிறன் இல்லை. அப்படியிருந்தும் இயேசுவின் வல்லமையான வார்த்தை மரித்த லாசருவுக்குள் கடந்து சென்றது. அவனின் ஆன்மாவை உயிர்ப்பித்தது. ஒன்றுமில்லாமையில் தேவன் கட்டளையிட்டபோது யாவும் உருவாக்கப்பட்டதானால் மரித்தவனின் ஆன்மாவை உயிரடைய செய்யவும் அவரது வார்த்தைகளால் இயலும். அவரின் வார்த்தைகள் நமக்குள்ளும் யாவையும் உருவாக்கும் ஆற்றலுள்ளது.
கிறிஸ்துவின் சத்தம் லாசருவை எழும்ப செய்தது. ஆனால் அவன் கட்டப்பட்டவனாக காணப்பட்டான். அதற்கு மரண கட்டுகள் என பெயரிடப்பட்டுள்ளன. இயேசுவின் வார்த்தையால் லாசருவின் ஆன்மா உயிர் பெற்றாலும் மரண கட்டுகள் அவன் சரீரத்தைச் சுற்றியிருந்தது. இயேசு அவனது கட்டுகளை அறுக்க சொன்னார். அப்பொழுது அவனது கட்டுகள் யாவும் அகற்றப்பட்டு விடுதலை பெற்றவனாய் தன் இல்லம் ஏகினான். இரட்சிக்கப்பட்டபின்பும் இன்னும் பாவ கட்டுகளாலும், சாப கட்டுகளாலும், மற்றும் பலவிதமான கட்டுகளாலும் கட்டப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கட்டுகள் அறுக்கப்பட்டு விடுதலையடைய ஆவியானவர் உதவி செய்கிறார்.
விடுதலை பெற்றவனாய் – புதிய ஜீவன் பெற்றவனாய் – தன் குடும்பத்தோடு இணைக்கப்பட்டவனாய் இயேசுவுக்கும், பிதாவுக்கும் நன்றி செலுத்தி தேவனைத் தொழுதுகொண்டான். தேவாலயம் சென்று தேவன் முன்னிலையில் நன்றி காணிக்கை செலுத்தியிருக்கக் கூடும். இச்செயலை கண்ணுற்ற சூழ்ந்திருந்த ஜனங்கள் பிதாவாகிய தேவனை மனமகிழ்வுடன் தொழுதுகொண்டவர்களாகவும் மாறினர். ஜனங்கள் இயேசுவை விசுவாசிப்பதற்கு அற்புதம் தேவைப்பட்டது. இஸ்ராயேலர் மோசேயை நம்புவதற்கு மோசேயால் பல அற்புதங்கள் நடத்தப்பட்டது. அதுபோல சூழ்ந்துள்ள புறஜாதி ஜனங்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதற்கு நம்மூலமாய் அற்புதங்கள் நடந்தாக வேண்டும். அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும். நம்மை கொண்டு பலத்த கிரியைகளை நடப்பிக்கவே அவர் விரும்புகிறார்.
புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்படியபண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை. ரோமர் 15:18.