இயேசு ஆவியில் கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார்.
Jesus, again groaning in Himself, came to the tomb. It was a cave, and a stone lay against it. (John 11:38)
Jn11:33; Jn13:21; Mt27:60,66; Mk7:34; Mk8:12; Gen23:19; Gen49:29-31; Isa22:16; Eze9:4; Eze21:6.
அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார்.அது ஒரு குகையாயிருந்தது, அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. (யோவான் 11:38)
யோவான் 11:33; யோவான் 13:21; மத்தேயு 27:60,66; மாற்கு 7:34; மாற்கு 8:12; ஆதியாகமம் 23:19; ஆதியாகமம் 49:29-31; ஏசாயா 22:16; எசேக்கியேல் 9:4; எசேக்கியேல் 21:6.
கல்லறை அருகில் இயேசு.
கல்லறையானது அசுத்த ஆவிகள் தங்கும் இடம். அசுத்தம் நிறைந்த இடம். இருள் நிறைந்த இடம். ஆனால் லாசருவை அடக்கம் செய்த இடத்திற்கு இயேசு கடந்து வந்தார். குஷ்டரோகியைத் தொட்டவர், பாவ அழுக்குகள் நிறைந்த மனுகுலத்தோடு வாழ வந்தவர் இந்த கல்லறை தோட்டத்துக்கும் வந்தார். இயேசு கிறிஸ்து நிறைவு, பரிபூரணம், தூய்மை, சந்தோஷம் போன்ற இடங்களை – சூழல்களை விரும்புகிறவராக இருந்தாலும் இவைகள் இல்லாது அசுத்தம், பாவம், பிசாசு, துக்கம், சாக்காடு,நோக்காடு, குறைவு நிறைந்த சூழல்களையும் விரும்பி அவைகளினால் பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து சென்றார். மனுக்குலத்தை ஒதுக்கி வைப்பதும், ஒதுங்கி செல்லுவதும் அவர் பணியல்ல, தம்மையே பலியாக கொடுத்தாவது மீட்க வேண்டும் என்பதுவே அவர் திருப்பணியாகும். கல்லறை ஒரு குடும்பத்தின் கண்ணீர் குளமாகும். அந்த கண்ணீர் குளத்தை மகிழ்ச்சியின் ஊற்றாக மாற்ற விரும்பி கல்லறையிடம் சென்றார்.
மனுகுலத்தின் கண்ணீர், குறைவு, அசுத்தம், தீமை, வியாதி, வெறுக்கப்பட்டிருத்தல், தள்ளபட்டிருத்தல், மரணம் போன்றவைகளிலிருந்து மனுகுலத்தை மீட்க சபையாக – விசுவாசியாக – ஊழியகாரனாக – பேராயராக – கார்டினல்களாக – மாடறேற்றர்களாக – பெரிய மனிதர்களாக – போப்புகளாக முயற்சி எடுப்பதுதான் – அதற்காக உழைப்பதுதான் உண்மை கிறிஸ்தவ பணி. கல்லறையில் அரைமணி நேரம் அடக்கம் செய்துவிட்டு வருவதல்ல ஊழியம், கல்லறைக்கு போகிறவர்களின் குடும்பத்தின் அவலங்களை நீக்க பாடுபடுவதே உண்மை திருப்பணி. வெள்ளையை வெள்ளையாக்குவதல்ல, கறுப்பை வெள்ளையாக்கப் பாடுபடுவதே கிறிஸ்தவ பணியாகும். கல்லறைக்கு சென்றவர் கல்லறையில் வைக்கப்பட்டு அதற்கு முடிவு உண்டாக்கினார். நாம் எப்படி?
கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்: அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1தெசலோனிக்கேயர் 4:16.