அனேகர் மரியாள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று அவளைப் பின்தொடர்ந்தனர்.
when they saw Mary rose up quickly and went out,followed her,saying,She is going to the tomb to weep there. (John 11:31)
Jn11:19,42,45; Jn12:47; Acts8:2; 1Cor2:15; Gen23:2; Gen37:35; 2Sam12:16-18; Job1:20-22; Ps77:2; Ecc7:4.
அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்து போகிறதைக்கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள். (யோவான் 11:31)
யோவான் 11:19,42,45; யோவான் 12:47; அப்போஸ்தலர் 8:2; 1கொரிந்தியர் 2:15; ஆதியாகமம் 23:2; ஆதியாகமம் 37:35; 2சாமுவேல் 12:16-18; யோபு1:20-22; சங்கீதம் 77:2; பிரசங்கி 7:4.
துக்கம் அனுஷ்டித்தல்.
மரித்தவர்கள் நிமித்தம் துக்கம் கொண்டாடுதல் எல்லா ஜனங்களிடத்திலும் உள்ள ஒரு வழக்கமாகும். சிலர் துக்கம் தாளாமல் கல்லறையில் சென்று அழுது துக்கத்தை வெளிபடுத்துவார்கள். லாசருவின் மரணத்தினிமித்தம் அவனது சகோதரிகளுக்கு ஆறுதல் சொல்ல வந்த கூட்டம் 4 நாட்கள் ஆகியும் அங்கேயே இருக்கின்றனர். மார்த்தாளின் அழைப்பை ஏற்றுகொண்ட மரியாள் இயேசுவைப் பார்க்கும் படியாக எழும்பி போவதை கண்ட உறவுகாரர்கள் மரியாளை பின்தொடர்ந்து சென்றார்கள். மரியாள் கல்லறையிடம் செல்கிறாள் என நினைத்து அவளைப் பின்தொடர்ந்தனர்.
கல்லறையில் சென்று அழுது தங்கள் துக்க நாட்களை முடித்து கொள்வது யூதர்களின் வழக்கம். முற்காலங்களில் பல நாட்கள் துக்கத்தை சுமந்து திரிவார்கள். அழுகையும் புலம்பலும் இழப்பினிமித்தம் கேட்கும். நல்ல ஆகாரங்களை எடுக்க மாட்டார்கள். விருந்து வீட்டுக்கு செல்லமாட்டார்கள். ஆனால் தற்காலங்களில் துக்கம் கொண்டாடுதல் இல்லை. மரித்தவனை அடக்கம் செய்தபின்பு துக்கம் கொண்டாடுதலை 3 ஆம் நாளிலே துக்க நிவிர்த்தி கூட்டம் வைத்து முடித்துக் கொள்ளுகிறார்கள். பின்பு மரித்தவரை முற்றிலுமாய் மறந்து போகிறார்கள். நமது பணம், புகழ், பதவி, அந்தஸ்தை இழந்தால் காலம் வரையிலும் அதை நினைத்து துக்கம் அனுஷ்டிக்கின்றோம். மனித உயிரின் இழப்பைக் குறித்து இவ்வளவு அசட்டைதனம் எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு பெருத்து வருகிறது.
இயேசுகிறிஸ்து தங்களுக்காய் பல பாடுகளை பட்டு மரித்து உயிர்விட்டு மீட்பை தந்ததைக் குறித்து கூட வருந்தி தேவ சமூகத்தில் பலநாட்கள் உபவாசமிருக்க மனமற்று கேளிக்கைகளும், விருந்துகளும் வைத்து கொண்டாடுவது ஆபத்தான அணுகுமுறை. மனித வாழ்க்கையில் பிறப்பும். இறப்பும் மிக முக்கியமானது.
யாவரும் அறிய பிறக்கின்ற மனிதன் ஒருவரும் அறியாது மறைந்து போகின்றான். இதை யாரும் மனதில் கொள்ளுவதில்லை.
மார்த்தாள், மரியாளின் துக்கம் லாசருவைக் கண்டால்தான் தீரும். அதைபோல நம்மை விட்டு மறைந்துபோனவர்களை முகமுகமாய் காணும்போதுதான் நம் துக்கம் ஆறும்.
விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம். இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதை தன் மனதிலே சிந்திப்பான். பிரசங்கி 7:2.