என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
He who believes in Me,though he may die,he shall live. (John 11:25)
Jn3:36; Lk23:43; Ro4:17; Ro8:10,11,38,39; 1Cor15:17-19; 2Cor5:1-8; Phi1:23; 1Thes4:14; Heb11:13-16; Job19:25-27; Isa26:19.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், (யோவான் 11:25)
யோவான் 3:36; லூக்கா 23:43; ரோமர் 4:17; ரோமர் 8:10,11,38,39; 1கொரிந்தியர் 15:17-19; 2கொரிந்தியர் 5:1-8; பிலிப்பியர் 1:23; 1தெசலோனிக்கேயர் 4:14; எபிரெயர் 11:13-16; யோபு 19:25-27; ஏசாயா 26:19.
விசுவாசிக்கிறவன் பிழைப்பான்.
இயேசுவே உயிர்ப்பும், ஜீவனுமாயிருப்பதினால் கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனே விசுவாசிக்கிறவன் ஆவான். விசுவாசிக்கிறவன் பிழைப்பான் என்பதை இருவிதங்களில் பொருள் கொள்ளுகிறோம்.
ஒன்று, லாசருவின் குடும்பம் விசுவாசத்திலும், அன்னியோன்னியத்திலும், அன்பிலும், கீழ்படிதலிலும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட குடும்பம். லாசரு இயேசுவையும், அவரின் வார்த்தைகளையும், கிரியைகளையும் நம்பினவன். இவ்விதம் விசுவாசம் கொண்ட லாசரு மரித்துபோயிருந்தாலும் ஜீவன் பெற்று மறுபடியும் பிழைப்பான் என்ற உடனடி கிரியையைக் குறிப்பிடுகின்றார் இயேசு.
2 வதாக, லாசருவின் சகோதரிகள் தன்னை விசுவாசித்தால், தன் கிரியைகளை விசுவாசித்தால் லாசருவை உயிரோடெழுப்புவேன் என்று விசுவாசித்தால் லாசருவைப்போல மரணத்தை அடைந்தாலும் உயிரோடெழுப்பப்படுவர்.
இந்த அடிப்படையில் விசுவாசிக்கிறவன் பிழைப்பான் என்று இயேசு சொன்ன வார்த்தையைத் திருச்சபைக்கு கொண்டுவரும்போது பவுல் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ரோமர்1:17) என்று ரோம சபைக்கு கூறுகின்றார். நீதிமானாயிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால்தான் ஜீவன் பெற இயலும். நீதிமானத்துவம் கிரியைகளில் வெளிப்படாமல் விசுவாசத்தினால் மாத்திரம் பிழைக்க முடியாது என்று யாக்கோபு கூறுகின்றார்.
விசுவாசத்தினாலும் நீதிமானாக முடியும், கிரியைகளினாலும் நீதிமானாக முடியும். என்றாலும் இரண்டும் இணைந்து வருதலே விசுவாச கிரியை ஆகும். தனது விசுவாசத்தை சொற்களினால் மட்டுமல்ல, கிரியைகளினாலும் வெளிப்படுத்தும்போதுதான் நித்திய ஜீவன் பெறுகின்றோம்.
இயேசுவோடு இணைந்து நற்கிரியைகளை செய்த லாசரு தன்னுடைய மரணத்துக்கு முன்பே இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டிருந்தான். அவனின் விசுவாசம் அவனது கிரியைகளினூடே முயற்சி செய்து இயேசு கிறிஸ்துவால் ஜீவனையும் பெற்றான்.
விசுவாசம் மரணத்தை வரவைத்தாலும் மரணத்திலே குடிகொள்ள இடம் கொடுக்காது. விசுவாசமானது ஜீவனுள்ளோரின் வாழ்வாயுதம்.
அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். கலாத்தியர் 5:6.