பாவஞ்செய்யாதே

அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே

Sin no more, lest a worse thing come upon you. (John 5:14)
Mt12:45; Lk11:26; Jn8:11; Rev2:21-23; Le26:23,24,27,28; 2Ch28:22; Ps9:13; Ps27:5,6; Ps66:12-15; Ps107:19-22; Ps116:12-19; Ps118:8; Isa38;20,22.

அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 5:14)

மத்தேயு 12:45; லூக்கா 11:26; யோவான் 8:11; வெளி2:21-23; லேவியராகமம் 26:23,24,27,28; 2 நாளாகமம் 28:22; சங்கீதம் 9:13; சங்கீதம் 27:5,6; சங்கீதம் 66:12-15; சங்கீதம் 107:19-22; சங்கீதம் 116:12-19;சங்கீதம் 118:8; ஏசாயா 38;20,22

பாவமும் கேடும்:

பாவம் என்பது பிரமாணத்தை மீறுவது. பிரமாணம் மீறப்பட்டால் பாவி என்றும் அழைக்கப்படுவோம், கேடுகளுக்கும் உள்ளாவோம்.

மரணத்துக்கு ஏதுவான பாவங்களுமுண்டு,
மரணத்துக்கு ஏதுவல்லாத பவங்களுமுண்டு. 1யோவான் 5:16.
சில பாவங்கள் நியாயதீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்,
சில பூரணம் ஆவது வரையிலும் தொடரும்.

பாவங்களில் பலவகைகள் உண்டு. எல்லா பாவங்களுமே கேடுகளுக்கு நேராகத்தான் வழிநடத்தும்.

– சொல்கேட்காது நடந்து கொள்வதும், கீழ்படியாமலிருப்பதும் பாவம்.
– கட்டளைகளை மீறுவது, அவமதிப்பது, கண்டுக்காமலிருப்பது பாவம்.
– ஒரே தேவனாகிய கர்த்தரை வணங்காமல் வேறு தெய்வங்களை வணங்குவது பாவம்.
– வேறு தெய்வங்களின் பெயரை தரித்துக் கொள்வதும், உச்சரிப்பதும் பாவமாகும்.
– தேவன் இணைத்த உறவிலிருந்து வெளியேறுவது பாவம்.
– இச்சை தூண்டும் அலங்காரம், பேச்சுக்கள், காட்சிகள், படங்கள் யாவும் பாவத்துக்கு கொண்டுசென்று பாழாக்கும்.
– வஞ்சிப்பது, ஏமாற்றுவது, பொய் சொல்லுவது பாவமாகும்.
– எதிர்த்து நிற்பது, சண்டைப்பண்ணுவது, எதிர்மறையாய் பேசுவது, குறை சொல்லுவது, கோள் மூட்டுவது பாவமாகும்.
– கனம் பண்ணாதிருப்பது, மரியாதை கொடாமலிருப்பது பாவமாகும்.
– கொலை செய்வது, கொள்ளையடிப்பது, திருடுவது குற்றமாகும்.
– பலதார திருமணங்கள், தன்னிச்சையான காதல் திருமணங்கள், முறைகேடான திருமணங்கள் யாவும் பாவமாகும்.
– இரத்தபழிகள் மகா பெரிய பாவம், அதற்கு துணைபோவதும், அதற்காய் கொடிபிடிப்பதும் மிகப்பெரிய பாவம்.
– கலகம் விளைவிப்பவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவாய் செயல்படுவது பாவமாகும்.
– தேவ நியமங்களுக்கு எதிர்த்து நிற்றல் பாவமாகும்.
– தன்மீது குற்றமிருந்தும் தேவனுடைய ஊழியகாரனாக – சபை போதகராக – பிரசங்கியாராக இருப்பது பாவமாகும்.
– ஒழுக்ககேடானவர்களை திருச்சபை பொறுப்புகளில் வைப்பது பாவமாகும்.
– குடிப்பது, வெறிப்பது, போதையேற்றுவது, போஜனபிரியம் பாவமாகும்.
– மன்னிப்புகேட்டும் மன்னியாமலிருப்பது அதிக பாவமாகும்
– செய்த தவறை நியாயபடுத்துவதும், மறைப்பதும் குற்றமாகும்.
– இன்னும் பல…

சிறிய பாவமோ, பெரிய பாவமோ, எல்லா பாவமும் கேட்டுக்கு நேராகவே கொண்டுபோகும்.
சிலவை உடனடி கேட்டையும்,
சிலவை நாள்பட்ட கேட்டையும் கொண்டுவரும்.

கேடு என்பது தண்டனையாகும்.
மரணம், வியாதி, நஷ்டங்கள், பிரிவுகள், இழப்புகள், வருத்தம், வேதனைகள், வளர்ச்சியற்று குறுகிபோகுதல் போன்றவை உண்டு.

செய்ததை மறவாதீர். செய்யவேண்டியதையும் மறவாதீர்.

பாவத்தை பாவமாக கருது.
பாவத்துக்கு தண்டனை உண்டு என்று நம்பு.

பாவத்தை நீ தொட்டால் அது உன்னை ஒருபோதும் விடாது என்று நம்பு.

கர்த்தாவே, நாங்கள் பாவிகளாய் இருந்தோம். பாவத்தின் பயங்கரத்தை சரீரத்திலும், ஆன்மாவிலும், வாழ்விலும் அனுபவித்தோம். தேவரீர் நீர் இரக்கமுள்ளவராயிருந்து உம் குமாரனை கொண்டு எங்களை பாவத்திலிருந்தும் அதன் பயங்கரத்திலிருந்தும் மீட்டெடுத்தீர். உமக்கு நன்றி. இனி நாங்கள் பாவத்துக்கு விலகி பரிசுத்தமுள்ள பிள்ளைகளாக சர்வ சிருஷ்டியும் எதிர்பார்க்கும் தேவ புத்திரர்களாக விளங்க எங்களுக்கு துணைபுரியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME