உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்

உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்.

Martha,I know he will rise again in resurrection at last day. (John 11:24)

Jn5:28,29; Mt22:23-32; Lk14:14; Act17:31,32; Act 23:6-9; Act24:15; Heb11:35; Phi3:10; Ps17:15; Ps49:14,15; Isa25:8; Isa26:19; Eze37:1-10; Dan12:2,3; Hos6:2; Hos13:14.

அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:24 )

யோவான் 5:28,29; மத்தேயு 22:23-32; லூக்கா 14:14; அப்போஸ்தலர் 17:31,32; அப்போஸ்தலர் 23:6-9; அப்போஸ்தலர் 24:15; எபிரெயர் 11:35; பிலிப்பியர் 3:10; சங்கீதம் 17:15; சங்கீதம் 49:14,15; ஏசாயா 25:8; ஏசாயா 26:19; எசேக்கியேல் 37:1-10; தானியேல் 12:2,3; ஓசியா 6:2; ஓசியா 13:14.

கடைசிநாளில் உண்டாகும் உயிர்ப்பு:
உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கும் சதுசேயருக்கு எதிராக பரிசேய எண்ணமுடையவராக காட்சியளிக்கின்றார் மார்த்தாள். கடைசி நாட்களில் யாவரும் உயிர்த்தெழுவர் என்பது பொதுவான நம்பிக்கை. மார்த்தாள் பொதுவான நம்பிக்கையை வெளிபடுத்தினாளா அல்லது நீதிமான்களின் உயிர்த்தெழுதலை வெளிப்படுத்தினாளா என்று தெரியவில்லை. எனவே இரு காரியங்களையும் குறித்து தியானிப்போம்.

பொதுவான உயிர்த்தெழுதல் யாவருக்கும் உரியது. மரித்த யாவரும் உயிர்த்து தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும். அவர்களில் நீதிமான்கள் நித்திய வாழ்வுக்கும், அல்லாதோர் நித்திய நிந்தைக்கும் அனுப்பப்படுவர். இந்த பொதுவான உயிர்த்தெழுதலையே பிறமதங்கள் தங்களுக்குரிய பாணியில் விளக்கம் கொடுக்கின்றது. இதன்பின்பு நடப்பதை குறித்து இந்த மதங்கள் தெரிவிப்பதில்லை. யூதசமயம், கிறிஸ்தவம் மட்டுமே இதற்கான விளக்கம் தருகின்றது.

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பின்வாங்கிபோகிறவர்களும், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவர்களும், பிற தெய்வங்களையே வணங்கி வைராக்கியம் பாராடுகிறவர்களும், பாவங்களிலே – அக்கிரமங்களிலே வேர்கொண்டவர்களும், கடவுள் இல்லை என்று சொல்லி மார்தட்டி திரிகிறவர்களும் உயிர்த்தெழுவர் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் நித்திய நிந்தைக்குள் – நரகத்துக்குள் தள்ளப்படும்படியாகவே உயிர்ப்பிக்கப்படுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இயேசுவையும், அவரது வார்த்தைகளையும், அவரது கிரியைகளையும் நம்பி அவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று பாவ மன்னிப்பை அடைந்து பரிசுத்த ஆவியின் நிறைவை அடைந்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் உண்மையோடும், உத்தமத்தோடும் வாழும் யாவரும் நித்திய வாழ்வுக்காய் உயிர்ப்பக்கப்படுகிறார்கள்.

ஞானவான்கள் ஆகாயமண்டல ஒளியை போலிருப்பார்கள். தானியேல் 12:3.

ADD YOUR COMMENT

Powered By Indic IME