நீர் தேவனிடம் கேட்பது உமக்குக் கொடுக்கப்படும் என்று அறிவேன்

நீர் தேவனிடம் கேட்பது உமக்குக் கொடுக்கப்படும் என்று அறிவேன்.

But even now I know that whatever You ask of God, God will give You. (John 11:22)

Jn11:41,42; Jn9:31; Jn17:2; Mt9:18; Mk9:23; Heb11:17-19; Ps2:8.

இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:22)

யோவான் 11:41,42; யோவான் 9:31; யோவான் 17:2; மத்தேயு 9:18; மாற்கு 9:23; எபிரெயர் 11:17-19; சங்கீதம் 2:8.

எனக்கு தெரியும்.
லாசருவின் குடும்பத்துக்கும் இயேசுவுக்கும் நல்ல – ஆரோக்கியமான உறவு இருந்தது. அவர்கள் மூவருக்கும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து நல்ல புரிந்துகொள்ளுதல் இருந்தது. மார்த்தாளும், மரியாளும் சற்று அவிசுவாசமான வார்த்தைகளை பேசியிருந்தாலும் இயேசு கிறிஸ்துவால் செய்யக்கூடிய பெரிய காரியங்களைக் குறித்து அவிசுவாசமாய் இருந்திருக்கவில்லை. இதனைக் குறித்து நாம் தியானிக்கலாம்.

ஒன்றாவது, இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், தேவனிடமிருந்து வந்தவர் என்றும், திரும்பி தேவனிடம் செல்லப்போகிறவர் என்றும் அறிந்திருந்தனர்.

இரண்டாவது, பிதா பரலோகிலும், இயேசு பூமியிலும் வாசம் செய்தாலும் தேவனுக்கும் இயேசுவுக்கும் பிரிக்கவியலாத ஒரு அன்னியோன்னியம் உண்டு என்பதை அறிந்திருந்தனர்.

மூறாவது, தமது தந்தையாகிய பிதாவாகிய தேவனிடம் இயேசுகிறிஸ்து எதைக் கேட்டாலும் அவர் அவருக்கு அருள் செய்வார் என்று அறிந்திருந்தனர்.

21 ஆம் வசனத்தில் அவிசுவாசமாய் பேசியிருந்தாலும், 22 ஆம் வசனத்தில் இந்த மூன்று விதமான விசுவாச உறுதியை வெளிப்படுத்தியதின் விளைவே 23 ஆம் வசனமாகும் என்று நாம் நம்பலாம்.

நமது விசுவாசம் கண்மூடித்தனமக இருக்கலாகாது. இயேசுவையும், அவரது வார்த்தைகளையும், அவரது கிரியைகளையும் குறித்து நமக்கு தெளிவான அறிவு இருக்க வேண்டும். தெய்வீக அறிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் தரிசனமும், விசுவாசமும் கிரியை செய்வதில்லை. லாசருவின் குடும்பம் இயேசுவையும், அவரின் வார்த்தைகளையும், அவரின் கிரியைகளையும்குறித்து நன்றாக அறிந்திருந்து அவர்மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்ததினால் அவர்களுக்குள் தரிசனம் – விசுவாசம் ஆகியவற்றின் மூன்று காரியங்களும் வெளிப்பட்டது.

அவரை அறியாமல், அவரை தரிசிக்காமல், அவரை நம்பாமல் நாம் நம் விசுவாச பாதையில் ஓடவும் இயலாது, அவரை கொண்டு போகவும் இயலாது, அவரை கொண்டு அற்புதங்களை நடப்பிக்கவும் இயலாது.

நல்ல நெருங்கிய உறவே அன்பையும், கிரியைகளையும் வெளிப்படுத்தும்.

இப்பொழுது நமக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு எத்தகையது?
நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும். யோவான் 15:7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME