மார்த்தாள் ஆண்டவரே நீர் இங்கிருந்தால் என் சகோதரன் மரிக்கமாட்டான்

மார்த்தாள்: ஆண்டவரே, நீர் இங்கிருந்தால் என் சகோதரன் மரிக்கமாட்டான்

Martha said to Jesus,Lord,if You had been here,my brother would not have died. (John 11:21)

Jn11:32,37; Jn4:47-49; Mt9:18; Mk5:35; Lk7:6-10,13-15; Lk8:41,49-55; 1Kin17:18; Ps78:19,41.

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். (யோவான் 11:21)

யோவான் 11:32,37; யோவான் 4:47-49; மத்தேயு 9:18; மாற்கு 5:35; லூக்கா 7:6-10,13-15; லூக்கா 8:41,49-55; 1இராஜாக்கள் 17:18; சங்கீதம் 78:19,41.

இங்கேயிருந்தீரானால்…
மார்த்தாளைப் போலவே மரியாளும் இவ்வாறுதான் கூறினாள். இந்த கூற்றில் இரண்டு உண்மைகள் இருப்பதாக கருத இடமுண்டாகின்றது.

மார்த்தாளும், மரியாளும் இயேசுவின் சர்வ வல்லமையை புரிந்துகொள்ளவில்லை. அதைக்குறித்த அறிவும் அவர்களுக்குள் இருந்ததுபோன்று தெரியவில்லை. இயேசு தங்களோடிருந்தாரானால் தங்கள் சகோதரனின் வியாதியை குணமாக்கியிருப்பார் என்பதை உண்மையாகவே நம்பினர். வியாதியிலிருந்து சுகம் தந்திருக்க முடியும் என்று நம்பின இவர்கள் மரணத்திலிருந்து லாசருவை உயிரோடெழுப்ப இயலும் என்று நம்பை இயலவில்லை. ஏன் இந்த தடுமாற்றம்? தண்ணீரின்மேல் நடந்ததையோ, மரணத்திலிருந்து உயிரோடெழுப்பியதையோ அறிந்திருக்கவில்லை போலும். ஆனாலும் லாசருவின் குடும்பத்தோடு நல்ல உறவு வைத்திருந்த இயேசுவின் பலத்த செய்கைகளை அறிந்திருக்காமல் இருந்திருக்க முடியாது. எனவே இயேசு தன் சகோதரனை உயிரோடு எழுப்புவார் என்று இவர்கள் நம்பவில்லை என்றே கருத வேண்டும்(24,39). இவர்கள் மட்டுமல்ல இவர்களின் உறவுகாரர்களும் லாசருவை சாகாமல் இருந்திருக்க செய்திருக்கலாமே என்றும் கூறினார்கள்(36,37). இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ளவர். அவரால் மரணத்தின் கூரை ஒடிக்கவும் முடியும். மரணத்துக்கு முடிவு உண்டாக்கவும் முடியும்.

மேலும் இவர்களின் இரண்டாவது எண்ணம் என்னவெனில் லாசரு உயிரோடிருக்கும்போதே வந்து சுகமாக்கியிருக்கலாமே. இப்பொழுது மரித்துபோய் விட்டானே. இனி என்ன செய்ய முடியும். நாம் இருக்கும் இடத்திற்கு அவன் வரமாட்டான் நாம்தான் அவன் இருக்கும் இடத்துக்கு போக வேண்டும். ஆகையினால் மரித்து போனவனைக் குறித்த நினைவுகள் மறக்கப்பட வேண்டும் என்று நம்பிக்கையிழந்தவர்களாய் இருந்தனர். 4 நாளான சரீரம் நாறுமேயொழிய புது சரீரமாக மாறாது என்றனர். சாராளின் செத்துபோன கர்ப்பத்தை உயிர்பெற செய்தவருக்கு – கடைசி நாட்களில் மரித்தவர்களை உயிரொடெழுப்புகிறவருக்கு மரித்து 4 நாளான லாசருவை உயிரோடெழுப்புவது கடினமான காரியமல்ல.

இயேசு இங்கேயிருந்தாலும் இராவிட்டாலும் – லாசரு மரித்திருந்தாலும் அவரால் உயிரோடு எழுப்ப இயலும்.

அவர் நம்மோடு இருந்தாலும், இராவிட்டாலும் இயேசு ஆற்றலுள்ளவராகவே இருக்கிறார். அவரால் செய்ய இயலாத காரியம் ஒன்றுமில்லை. நாம் அவரையும் அவரது கிரியைகளையும், வார்த்தையையும் நம்ப வேண்டும். அதுதான் முக்கியமானது. நம்புதலே வெற்றிக்கான பாதை.

கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான். நீதிமொழிகள் 28:25b.

ADD YOUR COMMENT

Powered By Indic IME