இந்த மரணம் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவானது

இந்த மரணம் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவானது.

I am glad for your sakes that I was not there, that you may believe. (John 11:15)

Jn11:4; Jn2:11; Jn14:10,11; 1Jn5:13; Jn12:30; Jn17:19; 2Co4:15; 2Tim2:10.

நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன், இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். (யோவான் 11:15)

யோவான் 11:4; யோவான் 2:11; யோவான் 14:10,11; 1யோவான் 5:13; யோவான் 12:30; யோவான் 17:19; 2கொரிந்தியர் 4:15; 2தீமோத்தேயு 2:10.

மரணம் விசுவாசத்துக்கேதுவானது.
யோவான் 11:4 ல் இந்த வியாதி தேவனுடைய மகிமைக்கு ஏதுவானது என்று சொல்லியிருந்தார். ஆனால் இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவானதாக ஆயிற்று. அதேவேளையில் இப்பொழுது இந்த மரணம் அவிசுவாசத்துக்கு ஏதுவானதல்ல, விசுவாசத்துக்கு ஏதுவானது என்கிறார். விசுவாசமே தேவ மகிமையைக் கொண்டு வரும். யோவாான் 11:40 ல் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கூறினார். தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்கு விசுவாசம் மூலகாரணமாயிருக்கின்றது. லாசரு மரணத்தினின்று எழுப்பப்படுவதினால் இயேசுவின் சீஷர்களும், லாசருவின் குடும்பத்தாரும், அங்கே வந்திருந்த மக்களும் விசுவாசத்துக்குள்ளாக வருவர்.

மரணம் வலியையும், வேதனையையும், ஆற்றமுடியாத காயத்தையும், இணைக்கமுடியா பிரிவையும் ஏற்படுத்துகின்றது. இதனை உணர்ந்த இயேசு இத்தகைய நிலையினின்று குடும்பத்தை மீட்கவும், தன்மீதும் தந்தையின் மீதும் விசுவாசம் கொள்ளவும் தக்கதாக மரணத்தினின்று எழுப்ப விரும்புகின்றார்.

விசுவாசம் என்பது தன் எண்ணங்கள், கிரியைகள், விருப்பங்களுக்கு மேலாக நிலை கொண்டிருக்கும் ஒன்று. எப்பொழுதும் அதனைக் குறித்தே நினைவுகூர செய்யும். தாவீது எப்பொழுதும் கர்த்தரை தன் முன் வைத்திருப்பதாக கூறுவதும் இதுவே. விசுவாசம் மட்டுமே தேவனையும், அவருடைய கிரியைகளையும் முன்வைத்து பார்க்கும், அனுபவிக்கும். தன் நினைவகத்திலிருந்து மாறிபோவதும், மறைந்து போவதுமே அவிசுவாசம். லாசருவின் உயிர்ப்பு அவனை பார்க்கும் எவருக்கும் தேவ கிரியையே நினைவில் தோன்றும். இதுவே விசுவாசமாகும். நாம் கிறிஸ்துவின் இரட்சண்ய கிரியையும், உயிர்ப்பையும், வரப்போகிறதையும், நாம் சேர்க்கபட போவதையும் எப்பொழுதும் நினைவில் கொண்டிருப்போமானால் விசுவாசத்தின் பாதையிலே நிலை நிற்கிறோம் என்றாகிறது.

கர்த்தாவே எங்களின் இழப்பில் விசுவாசத்தை கற்றுதந்து உயிருடன் வாழ்ந்து சாட்சியாய் இருக்க செய்வதற்காய் உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME