இயேசு அன்பாயிருந்தார்.
Now Jesus loved Martha and her sister and Lazarus. (John 11:5)
Jn11:36; Jn15:9-13; Jn16:27; Jn17:16; 2Kin4:20; Dan10:19; Gal2:20; Eph5:25-27; 1Jn4:10,11,19.
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். (யோவான் 11:5)
யோவான் 11:36; யோவான் 15:9-13; யோவான் 16:27; யோவான் 17:16; 2இராஜாக்கள் 4:20; தானியேல் 10:19; கலாத்தியர் 2:20; எபேசியர் 5:25-27; 1யோவான் 4:10,11,19.
அன்பின் குடும்பம்:,
கிறிஸ்துவால் நேசிக்கப்பட்ட குடும்பம். கிறிஸ்துவை உளபூர்வமாக நேசித்த குடும்பம். நன்மைகளிலும் – தீமைகளிலும், துன்பத்திலும் – இன்பத்திலும், வியாதியிலும் – சுகத்திலும், உண்மையாய், உத்தமமாய் இயேசுவை நேசித்த குடும்பம். இவர்கள் இயேசுவால் பரிபூரணமாக நேசிக்கப்பட்டார்கள். இயேசுவின் அன்பை பெறுவதற்கு அவர்கள் பலவிதமான வழிகளை பயன்படுத்தியிருக்கக்கூடும். உண்மையான கீழ்படிதல், உளபூர்வமான கீழ்படிதல், கண்டித்தாலும் தண்டித்தாலும் கீழ்படிதல், பலவீனத்திலும் குறைவிலும் கீழ்படிதல், ஆரோக்கியமான விருந்தோம்பல், குறைவிலும் புன்சிரிப்போடு விருந்தோம்புதல், கசப்பில்லாத வெறுப்பில்லாத விருந்தோம்பல் தான் அவர்கள் மீது இயேசு அன்பு வைக்க காரணமாயிற்று.
இயேசு காட்டிய அன்பு உண்மையான அகாப்பே அன்பு. நன்மைகள் செய்யும் அன்பு, இழப்பில் கூட இருக்கும் அன்பு, குறைவில் உதவி செய்யும் அன்பு, ஆபத்தில் அரவணைக்கும் அன்பு. இயேசுவின் இந்த அன்பை பெற நாம் எவ்விதம் நடந்து கொள்ளுகிறோம்? நமது கீழ்படிதலின் தராதரம் எப்படிப்பட்டது? நமது உள்ளம் அவரின் அன்பு வந்து தங்கக்கூடிய நல்ல உள்ளமாய் இருக்கிறதா? அவர் தன்னை போலொத்தவரையே தேடுகிறார். தன் அன்பை தன்னை போன்றவரில்தான் ஊற்றுகிறார்.
இயேசு எல்லாரையும் நேசிக்கிறார். பாவியாயிருந்தாலும் மனந்திரும்ப நேசிக்கிறார். ஏமாற்றுதல், வஞ்சித்தல், சூதுவாது இருந்தாலும் உள்ளம் மாற்றமடைய விரும்புகின்றார். போராட்டம், நெருக்கம், இழப்புகள் இருந்தாலும் தம்மை உறுதியாய் பற்றிக்கொள்ளும்படி கூறுகின்றார். அவரின் அன்பு அழியாதது, மாறாதது, குறையாதது. அந்த அன்பை பெற மிகுந்த நாட்டம் கொள்.
கர்த்தாவே நீர் எங்களை நேசித்து எங்களுக்காக தம் ஒரே மகனை தந்து அன்புகூர்ந்ததற்காய் ஸ்தோத்திரம்.