பெத்தானியா மரியாள் – மார்த்தாள் – லாசரு வியாதிப்பட்டிருந்தான்

பெத்தானியா மரியாள் – மார்த்தாள் – லாசரு வியாதிப்பட்டிருந்தான்.

Now a certain man was sick, Lazarus of Bethany, the town of Mary and her sister Martha. (John 11:1)

Jn11:3,6; Jn12:2,9,17; Mat21:17; Mat26:6; Mk11:1; Lk10:38-42; Lk16:20-25; Act9:37; Gen48:1; 2Kin20:1-12; Isa38:1.

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். (யோவான் 11:1)

யோவான் 11:3,6; யோவான் 12:2,9,17; மத்தேயு 21:17; மத்தேயு 26:6; மாற்கு 11:1; லூக்கா 10:38-42; லூக்கா 16:20-25; அப்போஸ்தலர் 9:37; ஆதியாகமம் 48:1; 2இராஜாக்கள் 20:1-12; ஏசாயா 38:1.

மரியாள் – மார்த்தாள் – லாசரு:
யோவான் 10 ஆம் அதிகாரம் நல்ல மேய்ப்பனாகிய இயேசுவை குறித்து குறிப்பிடும்போது 11 ஆம் அதிகாரம் இந்த பெத்தானியா குடும்பத்திற்கு இயேசு செய்த பெரிய காரியத்தை குறித்து குறிப்பிடுகின்றது.

மார்த்தாள் – மரியாள் – லாசரு ஆகியோர் சகோதரத்துவர்கள். நல்ல குடும்பம். ஆனால் மூன்று பேரும் வெவ்வேறு குணங்களை வெளிபடுத்துகின்றனர். மார்த்தாள் பணிவிடை பெண்ணாக சித்தரிக்கப்பட, மரியாளோ கிறிஸ்துவின் சீஷியாக காணப்படுகிறாள். லாசரு இயேசுவின் சிநேகிதனாகயிருக்கின்றான்.

இயேசுவால் சிநேகிக்கப்பட்ட லாசரு வியாதிப்பட்டான் என்பதை 3 ஆம் வசனம் சுட்டி காட்டுகின்றது. சுவிசேஷங்களின் பல இடங்களில் கிறிஸ்துவைக் கொண்டிருந்தவர்கள் சில பாடுகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகின்றது. ஆனால் அந்த பாடுகள் யாவும் அவருக்கு மகிமையுண்டாக்குவதாகவே காணப்பட்டுள்ளதை மறுக்கவியலாது. இங்கே இயேசுவால் சிநேகிக்கப்பட்ட லாசருவும் வியாதிபட்டான் என்று தரப்பட்டுள்ளது.

வியாதி என்பதற்கான மூலச்சொல் பலவீனம், பலம் இல்லாமை, சக்தியற்று போன நிலை, தேவையிலிருப்போர், ஏழ்மையிலிருப்போர் என்று பலவாறாக பொருள் தருகின்றது. உணவு குறைபாட்டினாலோ, சுகாதார குறைபாட்டினாலோ, தொற்று வியாதிகளினாலோ லாசரு பாதிக்கப்பட்டு வரவர பலவீனப்பட்டு போனான்.

பெண்களின் அன்புக்குரிய சகோதரனாகவும், பெண்களின் பாதுகாப்புக்கான சகோதரனாகவும் காணப்பட்ட லாசரு வியாதியின் பிடியில் அகப்பட்டான். இயேசுகிறிஸ்துவின் சிநேகிதனாகிய லாசருவே வியாதியினால் பாதிக்கப்பட்டான். இந்த வியாதி காய்ச்சல் என்று அறியப்படுகின்றது. உலக வாழ்வில் வியாதிகளும், துன்பங்களும், குறைகளும் உண்டு. ஆனால் தேவன் தமது பிள்ளைகளை சிநேகித்து காப்பாற்றுகிறார். வியாதிகளிலிருந்து விடுவிக்கிறார். குறைபாடுகளை அகற்றுகிறார். அவர்களை சாட்சிகளாக வைக்கின்றார்.

நல்ல குடும்பம் ஒரு ஆபத்தான சூழலுக்கு நேராய் போகின்றது. இந்த நிலைமையினின்று கிறிஸ்து இவர்களை விடுவித்து சந்தோசமடைய செய்யப் போகின்றார் என்பதை வரும் நாட்களில் நாம் கவனிக்க இயலும்.

கர்த்தாவே உம்முடையவர்களை நீர் காக்கிறீர். ஆனாலும் அவர்கள் இவ்வுலகத்தின் துன்பங்களினூடாகதான் கடந்து வரவேண்டியுள்ளதை அறிந்து நாங்கள் உம்மை பூரணமாக சார்ந்து வாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME