நான் செய்த நற்கிரியைகளில் எந்த கிரியைகளினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள்

நான் செய்த நற்கிரியைகளில் எந்த கிரியைகளினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள்?

Many good works I have shown you from My Father. For which of those works do you stone Me? (John 10:31,32)

Jn5:18; Jn8:59; Jn11:8; Mat21:35; Mat23:35; Act7:52,58,59; Heb11:37; Heb12:3; Exo17:4; 1Sam30:6.

அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். (யோவான் 10:31)

இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
(யோவான் 10:32)

யோவான் 5:18; யோவான் 8:59; யோவான் 11:8; மத்தேயு 21:35; மத்தேயு 23:35; அப்போஸ்தலர் 7:52,58,59; எபிரெயர் 11:37; எபிரெயர் 12:3; யாத்திராகமம் 17:4; 1சாமுவேல் 30:6.

நற்கிரியைகள்:
பிதாவாகிய தேவன் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நற்கிரியைகள் செய்வதற்காகவே இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசுகிறிஸ்துவும் நற்கிரியைகள் தேவைபட்ட ஒவ்வொருவரின் ஆன்மீக, சரீர பிரகாரமான வாழ்விற்கான நற்கிரியைகளை செய்தார். தமது சரீரமாகிய சபைக்குட்பட்ட யாவரும் நற்கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் போதித்தார். நற்கிரியைகளை செய்வதற்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டோம் என்று பவுல் கூறுகின்றார்.

நற்கிரியைகள் செய்து சுவிசேஷம் அறிவிக்கிற சபையாரும் உண்டு. சுவிசேஷம் அறிவித்து இரட்சிக்கப்பட்டவர்களுக்கு நற்கிரியை செய்கிற சபையாரும் உண்டு. ஆன்மீக இரட்சிப்பை மட்டுமே போதிக்கிற சபையாரும் உண்டு. சுவிசேஷமும் நற்கிரியைகளும் திருச்சபையின் இரு கண்களாக, இரு கரங்களாக, இரு கால்களாக உள்ளது. ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு திருச்சபையை உருவாக்க இயேசுகிறிஸ்து கற்பிக்கவில்லை.

நற்கிரியைகளினால் தங்களை அலங்கரிக்கிற சபையாரை, மனிதர்களை நாம் அவமானமாக நினைக்க வேண்டாம். அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர்கள் செய்யும் இப்பணியினால் இவ்வுலகம் மிகவும் உயர்ந்து நிற்கிறது.

கிறிஸ்தவ சபையார் நற்கிரியைகளில் பழகியிருக்க வேண்டும். இக்காலத்தில் சுவிசேஷத்துக்கல்ல, நற்கிரியை செய்து சுவிசேஷம் அறிவிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றது. நற்கிரியைகள் பெற்றுக்கொண்ட ஒருவர் இயேசுகிறிஸ்துவின் சபைக்கு ஆதரவாய் இருக்கின்றார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன.

இயேசுகிறிஸ்து தம்மை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினால் யூதர்கள் அவரை கல்லெறிய முன்வந்தனர். இயேசுகிறிஸ்துவோ தம்மை விசுவாசித்து சமூகத்தின் எளியவர்களை மேம்பாடு அடைய செய்வதினிமித்தம் கல்லெறிய துணிதல் தவறான ஒன்று என்று கூறுகின்றார்.

பரலோகத்தின் சுவிசேஷத்தைகூறி நற்காரியங்களை அறிவித்து,நற்கிரியைகளை செய்வதினிமித்தமாய் – கடன்பட்டு வாழ்வுக்கு வழியின்றி தவிப்போருக்கு நல்வழி காட்டும் நற்கிரியை செய்வதினிமித்தம் உலகம் நம்மை பகைக்குமானால் பகைக்கட்டும். சிறையில் அடைக்கட்டும். நம்மை மீட்டவர் முற்றிலுமாய் நம்மை மீட்டு ஜீவகரை சேர்ப்பார். மறவாதிருங்கள்.

நற்கிரியைகள் செய்யுங்கள்… நற்காரியங்களை அறிவியுங்கள்..
கர்த்தாவே உம் மகன் மூலம் அனேக நற்காரியங்களை எங்களுக்கு செய்து எங்களை மீட்டீர். நாங்களும் தொடர்ந்து அதே முறையில் உம்மை பின்பற்ற பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME