நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.

I and My Father are one. (John 10:30)

Jn1:1,2; Jn5:17,23; Jn8:58; Jn14:7-11,23; Jn16:15; Jn17:10,21; Mt11:27; Mt28:19; 1Tim3:16; Tit2:13; 1Jn5:7,20.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (யோவான் 10:30)

யோவான் 1:1,2; யோவான் 5:17,23; யோவான் 8:58; யோவான் 14:7-11,23; யோவான் 16:15; யோவான் 17:10,21; மத்தேயு 11:27; மத்தேயு 28:19; 1தீமோத்தேயு 3:16; தீத்து 2:13; 1யோவான் 5:7,20.

தந்தையும் மகனும்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பரலோக பிதாவினால் தேவ குமாரனாகவும், மனுஷ குமாரனாகவும் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார். இதனால் இயேசுகிறிஸ்து எப்பொழுதும் அவரை தனது சொந்தபிதா என்று அறிக்கையிடுவதுண்டு. தந்தையும் மகனுமாய் இருப்பதினால் ஒன்றாயிருக்கிறார்கள் என்பது இப்பகுதியின் விளக்கம். தோற்றத்தில் ஒன்றாயிருக்கிறார்களா, குணங்களில் தன்மையில் ஒன்றாயிருக்கிறார்களா, இணைந்து பணியாற்றுவதில் ஒன்றாயிருக்கிறார்களா அல்லது இருவரும் ஒருவரே என்றவாறு இருக்கிறார்களா என்று தியானிக்கும்போது இரு விஜயங்களை நாம் அறிகின்றோம்.

மனிதர்க்கு தேவ சாயலை கொடுக்கும்படிக்கு இருவரும் ஒரே சாயலையும் தன்மையையும் உடையவர்களாயிருக்கிறார்கள். மனிதர்க்கு இரட்சிப்பை கொண்டுவரும் தேவதிட்டமாகிய இரட்சண்ய கிரியையிலும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று அறியலாம். தேவனுடைய காரியங்களில் விவிலியம் சொல்லுவதற்கு மேலாக சிந்தித்து ஆராய்ந்து இடறிபோவதை தேவன் விரும்பவில்லை.

இயேசுகிறிஸ்துவும் பிதாவும் ஒன்றாகயிருந்து உலகமீட்புக்காக கிரியை செய்கின்றார்கள். பிதாவின் விருப்பம் நிறைவேற்றும் குமாரனாகிய இயேசு பிதாவோடு தன்னை இணைத்தே பேசுகின்றார். சிந்தை, மனதளவில் ஒன்றித்து செயல்படுவதே வளர்ச்சியும், எழுச்சியுமாகும். கணவனும் மனைவியும் ஒரே சிந்தையாக செயல்படுவது, பெற்றோரும் பிள்ளைகளும் ஒரே சிந்தையாய் செயல்படுவது, இரு சகோதரர்கள் ஒன்றாய் செயல்படுவது, போதகரும் சபையாரும் இணைந்து செயல்படுவது தான் தேவனின் விருப்பம். நாம் ஆண்டவருடன் இணைந்து நடப்போமா?

ஏனோக்கும் நோவாவும் தேவனோடு சஞ்சரித்து பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். நாம் தேவனோடு இணைந்து சபைகளுக்குள், தேசத்துக்குள் பெரும் மாற்றங்களை கொண்டுவர முயற்சிப்போமா?

கர்த்தாவே நீங்களும் உங்கள் குமாரனும் இணைந்து உலகை இரட்சித்ததுபோல நாங்களும் ஆவியானவரும் இணைந்து நல்ல மனையாட்டி சபைகளை உருவாக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME