அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை.
and they shall never perish. (John10:28b)
Jn3:15,16; John 5:24; John6:37,39,40; John17:12; John18:9; Mark13:22; Romans 5:6,8,10; Romans8:1,33-39; Col3:3,4; 1Pet1:5; 1Jn2:19; 1Jn5:18; Jud1:24; Heb6:4-8.
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28)
யோவான் 3:15,16; யோவான் 5:24; யோவான் 6:37,39,40; யோவான் 17:12; 18:9; மாற்கு 13:22; ரோமர் 5:6,8,10; ரோமர் 8:1,33-39; கொலோசெயர் 3:3,4; 1பேதுரு 1:5; 1யோவான் 2:19; 1யோவான் 5:18; யூதா1:24; எபிரெயர் 6:4-8.
கெட்டுப்போகவிடார்.
விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவனைகொடுக்கிறவரே அவன் கெட்டுபோகாமலிருக்கவும் செய்கின்றார். அதாவது அவனை ஆக்கினைதீர்ப்புக்குட்படுத்துவதில்லை.பாவம் அவனை மேற்கொள்ள செய்வதுமில்லை. மனுஷர்கள் அவன்மேல் குற்றம் சுமத்த அனுமதிப்பதில்லை. விசுவாசிக்கிறவனுக்கு இவ்விதமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவனுக்குள் இயேசுகிறிஸ்து தமது வாக்குதத்தங்களையும், பரிசுத்த ஆவியையும் அவனுக்குள் வைத்துள்ளார். இதனை யோவான் பரிசுத்த வித்து என்கிறார். இந்த வித்து அவனுக்குள் இருப்பதுவரையிலும், பழைய ஏற்பாட்டில் வாசல் நிலைக்காலில் இரத்தம் தோய்க்கப்பட்டபோது தலைபிள்ளை சங்காரதூதன் உள் நுழையமுடியாதது போல பிசாசுகளும் அவனது கிரியைகளும் அவனில் பெலன் கொள்ள இயலாது.
தேவனுடைய பாதுகாப்பு என்பது கெடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டதாகும். இந்த பாதுகாப்பு இருப்பது வரையிலும் வாதைகள் நெருங்குவதில்லை. தோல்விகள் உண்டாவதில்லை. ஆபத்துகளுக்குள் விடப்படுவதில்லை. கெட்டுபோவதற்கான பாதுகாப்பல்ல, நித்திய ஜீவன் கொடுக்கும்படியான பாதுகாப்பு,
நம்பிக்கையும் விசுவாசமுமே நம்மை அவருடன் இனைக்கின்றது. பணத்தினாலும், அறிவினாலும், அந்தஸ்துகளினாலும் அவரோடு நெருங்கவியலாது. அவரோடு இணைக்கப்பட்டால் மட்டுமே அவரின் –பாதுகாப்பு நமக்கு உண்டாகும். நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவன் மேலிருக்கும்படியாய் கவனித்துக்கொள்வோம். அசைவுறும் விசுவாசமல்ல, கலப்பட விசுவாசமல்ல, உறுதியான விசுவாசம், அசைவில்லாத விசுவாசம், தூய்மையான விசுவாசம் உடையவர்களாய் காணப்படுவோம்.
நாம் கெட்டுப்போவதற்கல்ல, நாம் பிழைத்திருந்து வாழ்வதற்கே அவர் மரித்தார்.
கர்த்தாவே உமது மகன் மூலம், கெட்டுப்போய் கொண்டிருந்த எங்களை மீட்டு எடுத்தீர். இனி நாங்கள் கெட்டுப்போகவல்ல பிழைத்திருப்பதற்காக கீழ்படிந்திருக்க பெலன்தாரும்.