நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்.
And I give them eternal life, (John10:28a)
Jn3:16,36; Jn5:39,40; Jn6:27,40,47; Jn11:25; Jn17:2; Rom5:21; Rom6:23; 1Tim1:16; 1Jn2:25; 1Jn5:13-20; Jud1:21.
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28)
யோவான் 3:16,36; யோவான் 5:39,40; யோவான் 6:27,40,47; யோவான் 11:25; யோவான் 17:2; ரோமர் 5:21; ரோமர் 6:23; 1தீமோத்தேயு 1:16; 1யோவான் 2:25; 1யோவான் 5:13-20; யூதா 1:21.
நித்திய ஜீவன் தருகிறார்:
இயேசுகிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றி அவர் சத்தம் கேட்டு கீழ்படிந்து அவருடைய அடிச்சுவடுகளில் நடந்து அவரை பின்பற்றுகிறவர்களுக்கு என்றென்றும் அழியாமல் இருக்கும்படியான நித்திய ஜீவனை தருகின்றார்.
அவரால் அறியப்பட்டு அவரால் நடத்தபடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார்.
விசுவாசவாழ்வு என்பது கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. அவர் எவ்விதம் மறுமைக்குள் பிரவேசித்து இன்றும் ஜீவித்திருக்கின்றாரோ அதைபோலவே இந்த விசுவாச நீரோட்டத்துக்குள் வந்தவர்கள் மறுமைக்குள் பிரவேசித்து என்றென்றும் அழிவில்லாமல் வாழ்வார்கள்.
இவ்வுலகத்தின் எல்லாவிதமான நெருக்கடிகள் நம்மை நெருக்கினாலும் விசுவாசத்துக்குள் இருப்பவர்கள் பயமில்லாதிருக்க ஒரே காரணம் இந்த நித்திய ஜீவனே.
நித்திய ஜீவனை அடையும்படியாய் நாம் அவரோடு இனக்கமாய், நெருக்கமாய் வாழ கற்றிருக்க வேண்டும். உலகத்தினால் கறைபடாது வாழ கற்றிருக்க வேண்டும். கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்திருக்க வேண்டும். பரலோக வாஞ்சையைக் கொண்டிருக்க வேண்டும். சகோதர சிநேகத்தைக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோரைக் கனம் பண்ண வேண்டும். குடும்பத்தை நன்றாய் நடத்த வேண்டும். கலகமில்லாமல் ஜீவனம் பண்ண வேண்டும். உலக இச்சைகளுக்கு விலகி வாழ வேண்டும். விவிலிய தியானம், ஜெப வாஞ்சை, ஆலய வாஞ்சை, ஊழிய வாஞ்சை உடையவர்களாயிருக்க வேண்டும்.
நமது வாழ்வு நிலையற்றது. எனவே நிலையான வாழ்வை பெற்றுதானாக வேண்டும். நிலைவாழ்வு இல்லாமல் நாம் நிலைத்து வாழ இயலாது.நித்திய ஜீவன் தரும் இயேசுவை நம்பு.
கர்த்தாவே நீர் உமது மகனை நம்பி வாழ்கின்றவர்களுக்கு நித்திய ஜீவனைத் தந்துள்ளமைக்காக நன்றி.