இயேசு தேவாலயத்தில் சாலொமோன் மண்டபத்தில் உலாவினார்.
And Jesus walked in the temple, in Solomon’s porch. (John10:23)
Act3:11; Act5:12; 1Kin6:3; 1Kin7:12; Act7:58; Lev26:12; 2Chr16:9; 2Cor6:16; Rev7:1.
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். (யோவான் 10:23)
அப்போஸ்தலர் 3:11; அப்போஸ்தலர் 5:12; 1இராஜாக்கள் 6:3; 1இராஜாக்கள் 7:12; அப்போஸ்தலர் 7:58; லேவியராகமம் 26:12; 2நாளாகமம் 16:9; 2கொரிந்தியர் 6:16; வெளி 7:1.
உலாவுகிற கர்த்தர்:
சாலொமோன் மண்டபம் என்பது சாலொமோனால் கட்டப்பட்டது. இம்மண்டபமானது தேவாலயத்தின் முன் அமைந்துள்ள ஒன்று. இது 20 முழு நீளம், 10 முழ அகலம் கொண்டது. குளிர்காலத்தில் இந்த இடத்தில் தான் இயேசு நடந்துக் கொண்டிருந்தார். அன்று ஏதேன் தோட்டத்தில் உலாவி ஆதி முற்பிதாக்களுக்கு வாழ்வியலை கற்றுக் கொடுத்தார். பரலோகத்தில் உலாவி தம் மகிமையை வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். சபையின் நடுவே – ஆலயத்தின் நடுவே உலாவி தமக்கு பயப்படும் பயம் இருக்கும்படி செய்தார். இஸ்ராயேல் ஜனங்களின் நடுவிலே உலாவி தமது பரிசுத்தத்தை விளங்கப் பண்ணினார்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது சரீரமாகிய சபையிலே குத்து விளக்குகளின் நடுவிலே – தேவனை ஆராதிக்கும் சபையிலே உலாவிக் கொண்டு வருகிறார். அவ்விதம் உலாவி தமது மகிமையையும், மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும், இரட்சண்யத்தையும், ஞானத்தையும் விளங்கப்பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்க தேவனை ஆராதிக்கும் ஸ்தலமாகிய தேவாலயத்தை தீட்டுபடுத்தும் ஊழியகாரர்களும், விசுவாசிகளும் இஸ்ராயேலருக்கு கிடைத்த வெகுமதியையே பெறுவார்கள். தேவாலயத்தை நிராகரிக்கும் உபதேசங்களுக்கும் உரிய வெகுமதி உண்டு. அவர் தமது மேன்மையை விளங்கச் செய்வதினால் அவருடைய ஆலயத்தில் நமது தூய்மையையும், கீழ்படிதலையும், நம்பிக்கையையும் அதிகமாக வெளிபடுத்த விரும்புகிறார். தேவனோடு உலாவி நன்மை பெற்ற ஏனோக்கு, நோவா பொன்றவர்களைப் போல நாமும் கிறிஸ்துவோடு உலாவி கிறிஸ்துவோடு வாழ்ந்து, கிறிஸ்துவிலே நிறைவடைந்து ஜெயமெடுப்போம்.
கர்த்தாவே நீர் ஆதியில் உலாவியது போல இப்பொழுது உம் மகனை எங்கள் மத்தியில் உலாவச் செய்து கிரியைகளை நடப்பிப்பதற்காக ஸ்தோத்திரம்.