பிதா என்னை அறிந்திருக்கிறார், நான் பிதாவை அறிந்திருக்கிறேன்

பிதா என்னை அறிந்திருக்கிறார், நான் பிதாவை அறிந்திருக்கிறேன்.

I am the good shepherd; and I know My sheep, and am known by My own. (John10:14)

Jn17:3,8; 2Cor4:6; Eph1:17; Eph3:19; Phil3:8; 2Tim1:12; 1Jn5:20; Isa53:11.

நானே நல்ல மேய்ப்பன், பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், (யோவான் 10:14)

யோவான் 17:3,8; 2கொரிந்தியர் 4:6; எபேசியர் 1:17; எபேசியர் 3:19; பிலிப்பியர் 3:8; 2தீமோத்தேயு 1:12; 1யோவான் 5:20; ஏசாயா 53:11.

பிதா – குமாரன்:
பிதாவாகிய தேவன் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார். தன் ஒரே குமாரனாக அறிந்திருக்கிறார். வார்த்தையாக அறிந்திருக்கிறார். படைப்பில் கூட இருந்தவராக அறிந்திருக்கிறார். தன் நேசகுமாரனாக அறிந்திருக்கிறார். தனக்கு முற்றிலும் கீழ்படிபவராக அறிந்திருக்கிறார். தன் விருப்பம் நிறைவேற்றுபவராக அறிந்திருக்கிறார். உலகை இரட்சிப்பவராக அறிந்திருக்கிறார். இவர்மூலம் அனேகர் தம்மண்டை சேர்க்கப்படுவர் என்பதையும் அறிந்திருக்கிறார்.

குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் தமது பிதாவாகிய தேவனை தன்னுடைய தந்தையாக அறிந்திருக்கிறார். தன்னை மடியில் வைத்திருப்பவராக அறிந்திருக்கிறார். தன்னோடு எப்பொழுதும் இருப்பவராக அறிந்திருக்கிறார். தான் செய்யவேண்டியதையும், சொல்லவேண்டியதையும் அவ்வப்போது தனக்கு உணர்த்தி நடத்துபவராக அறிந்திருக்கிறார். எல்லா சூழ்நிலையிலும் தனக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருப்பவராக அறிந்திருக்கிறார். தந்தை கட்டளையிட்டதை நிறைவேற்றினால்தான் தன்மீது அன்பாயிருப்பார் என்பதை அறிந்திருக்கிறார். தன்னைவிடவும் தனக்கு தந்தை கட்டளையிட்ட தந்தையின் விருப்பமே மேலானது என்றும் அறிந்திருக்கிறார். தந்தை தன்னை அனுப்பினதை நிறைவேற்றாமல் தந்தையிடம் செல்லமுடியாது என்றும், செய்துமுடித்தால் தந்தையே தம்மிடம் மறுபடியும் தன்னை சேர்த்துக் கொள்வார் என்றும் அறிந்திருக்கிறார். யார்மீதும் கவனம் வைக்காமல் எதன் மீதும் சிந்தை வைக்காமல் தந்தைமீதே கவனம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிந்திருக்கிறார். தான் பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும், உயிர்த்தெழவேண்டும் என்றும் அறிந்திருக்கிறார். சிலுவை சுமந்து அதில் அறையப்பட்டு மரணமடைய வேண்டும் என்றும் அறிந்திருக்கிறார். தன் சரீரமாகிய சபையை ஸ்தாபித்து அதனை தம் ஆவியானவரைக் கொண்டு தற்காத்து தந்தையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார்.

இவ்விதமாய் பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய கிறிஸ்துவுக்குமுள்ள உயரிய உறவைப்போல உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் உங்கள் ஊழியருக்கும் உங்களுக்கும் உங்கள் துணையாளருக்கும் உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் இடையில் உள்ள உறவு எப்படியுள்ளது என்று சிந்திப்பீர்களா?.

கர்த்தாவே உமக்கும் உம் மகனுக்குமுள்ள புரிந்துகொள்ளுதலை போல நாங்களும் ஒருவருக்கொருவர் நல்ல புரிந்து கொள்ளுதலை அமைத்து கொள்ள எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME