ஓநாய் ஆடுகளைப்பீறி அவைகளைச் சிதறடிக்கும்

ஓநாய் ஆடுகளைப்பீறி அவைகளைச் சிதறடிக்கும்

The wolf catches the sheep and scatters them. (John10:12)

Mt7:15; Mt10:16; Lk10:3; Act20:29; Isa24:1; Jer10:21; Jer23:1,2; Zec1:19; Mt12:30; Mt26:31; Act5:37.

மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். (யோவான் 10:12)

மத்தேயு 7:15; மத்தேயு 10:16; லூக்கா 10:3; அப்போஸ்தலர் 20:29; ஏசாயா 24:1; எரேமியா 10:21; எரேமியா 23:1,2; சகரியா 1:19; மத்தேயு 12:30; மத்தேயு 26:31; அப்போஸ்தலர் 5:37.

சிதறடிக்கப்படும் ஆடுகள்:
ஓநாயினிமித்தம் மேய்ப்பன் சிதறடிக்கப்படுகிறான். மேய்ப்பனிமித்தம் ஆடுகள் சிதறடிக்கப்படுகிறது. கீழ்படியாத மேய்ப்பனும், ஆடுகளும் சிதறடிக்கிறவன் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிறார்கள். இஸ்ராயேலர் தேவனுக்கும், மோசேக்கும், நியாயபிரமாணத்துக்கும் கீழ்படியாமல் போனதால் பல தேசங்களுக்குள் சிதறடிக்கப்பட்டார்கள். ஆனாலும் இரக்கமுள்ள தேவன் அவர்கள் மேல் வைத்த காருண்யத்தினால் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து அவர்களை கூட்டிச் சேர்த்தார்.

பாவத்தினிமித்தம், கீழ்படியாமையினிமித்தம், சுயவைராக்கியத்தினிமித்தம், குறைவுகளினிமித்தம், துன்பங்களினிமித்தம், பஞ்சத்தினிமித்தம், பிசாசுகளினிமித்தம், கெட்ட நடக்கைகளினிமித்தம், சத்திய அறிவு இல்லாததினிமித்தம், கடன்களினிமித்தம் மந்தைகளாகிய விசுவாசிகள் சிதறடிக்கப்படுவதை காண்கிறோம். சிதறடிக்கப்படுதல் விசுவாசிகளை வேதனைக்குள்ளும், தரித்திரத்துக்குள்ளும், நிலையற்ற தன்மைக்குள்ளும் இட்டுச் செல்கின்றது. இவ்விதம் விசுவாசத்தை விட்டும், திருச்சபையை விட்டும், கிறிஸ்துவை விட்டும் சிதறடிக்கும் ஓநாய் போன்றவைகள் துரத்தப்பட, வெளியேற்றப்பட மேய்ப்பர்கள் பாடுபட வேண்டும்.

சிதறடிக்கப்பட்டவர்கள் சிறையிருப்புக்குள் தள்ளப்பட்டார்கள். உலகியல் காரியங்களினால் சிதறடிக்கப்படுகிறவர்கள் சாத்தானுடைய ஆளுகைக்குள் கொண்டுப்போகப்படுகிறார்கள். சாத்தான் அவர்கள் விசுவாசத்தைக் கவிழ்த்து வியாதிகளினாலும், தரித்திரத்தினாலும் உருவக் குத்தி நரகத்துக்கு நேராக கொண்டு சேர்க்கிறான்.

சிதறடிப்பவனின் உண்மை ரூபத்தை அறியவே தேவன் தமது ஆவியை நமக்கு தந்துள்ளார். தேவ ஆவியை கொண்டு நம்மை சிதறடிக்கவரும் மாயவலைகளிலிருந்து தப்பித்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் நிலைத்திருங்கள். சபைவிட்டு சபை ஓடுகிறவர்கள் சிதறடிக்கிறவன் கையில் அகப்படக்கூடும். எனவே நாம் நம் தொழுவத்தில் தரித்திருந்து விசுவாசத்தில் செயல்படுவோம்.

கர்த்தாவே சிதறடிக்கிறவனால் மந்தைகளாகிய நாங்கள் சிதறடிக்கப்படாதபடிக்கு உமக்கு கீழ்படிந்து உம் வழியில் நடந்து செல்ல எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME