என்வழி பிரவேசித்தால் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
If anyone enters by Me, he will go in and out and find pasture. (John 10:9)
Ps23:1-6; Ps80:1-3; Ps95:7; Ps100:3; Isa40:11; Isa49:9,10; Eze34:12-16; Zec10:12.
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9)
சங்கீதம் 23:1-6; சங்கீதம் 80:1-3; சங்கீதம் 95:7; சங்கீதம் 100:3; ஏசாயா 40:11; ஏசாயா 49:9,10; எசேக்கியேல் 34:12-16; சகரியா 10:12.
மேய்ச்சலை கண்டைவர்:
இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருக்குள் வாழுகிறவர்கள் ஆட்டுதொழுவத்துக்குள்ளும், வெளியேயும் நல்ல மேய்ச்சலைக் கண்டைவர் என்று கூறுகின்றார்.
உள்ளே என்பது பாதுகாப்பையும், வெளியே என்பது பசுமையான புல்வெளியயும் குறிக்கின்றது. இவைகள் சரீரத்துக்கனவைகளாக கருதினாலும் ஆன்மாவுக்குரியதாகவும் நம்பப்படுகின்றது. கிறிஸ்துவுக்குள் வாழும் ஆன்மா கிறிஸ்துவுக்கு உள்ளேயும், கிறிஸ்துவுக்கு வெளியேயும் சுகமான வாழ்வை காண இயலும்.
உள்ளேயும் வெளியேயும் என்பது தவறான வழிகாட்டுதலுக்கானது அல்ல. தொழுவத்துக்குள் அமைந்த வாழ்க்கையை தொழுவத்துக்கு வெளியே வாழ வேண்டும் என்பதாகும். உள்ளே எதை கற்றோமோ அதையே வெளியே பயன்படுத்த வேண்டும். வெளிப்புறமானது மாம்சீக உலகமாயிருப்பதினால் வெளியிலிருந்து உள் நோக்கி அல்ல, உள்ளிருந்து வெளிநோக்கி உள்ளான தன்மைகளோடு பயணிக்க வேண்டும்.
வெளியே சென்று கொழுத்த கன்றாய் வளர பசுமையான புல்வெளி உண்டாயிருக்க வேண்டும். கிறிஸ்தவனின் உலக வாழ்க்கையில் எது தேவனுக்கு பிரியமான வாழ்வுமுறை என்பதை தேவனே தீர்மானிக்கின்றார்.
இரட்சிப்பை வாழ்க்கையின் உள்ளான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் கொண்டு செலுத்துவதையே அவர் விரும்புகின்றார். கிறிஸ்து வழியாக வருபவரே உள்ளேயும், வெளியேயும் இடறலற்ற, தூய்மையான , மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும்.
மேய்ச்சலை கண்டடைய மேய்ப்பனை சார்ந்து வாழ்.
கர்த்தாவே உமக்குள் நீர் எங்களுக்கு நீர் உருவாக்கி வைத்துள்ள அனைத்துக்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.